கொடநாடு வழக்கில் அதிர்ச்சி.. குலைநடுங்க வைக்கும் தகவல்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்!
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் கனகராஜ் காா் விபத்தில் உயிரிழந்தாா். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

ஷகில் அக்தர் ஆய்வு
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக கொடநாடு எஸ்டேட்டில் நேரடியாக விசாரணையில் ஈடுபட்ட நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பின்னரும் கொடநாடு எஸ்டேட் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுமட்டுமல்லாமல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொடநாடு பங்களாவில் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி ஷகில் அக்தர் மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் அங்கு பணிபுரியும் பலரிடம் விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில் சிபிசிஐடி விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியன்று கொடநாடு பங்களாவிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் 10ம் கேட்டில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தனர். இதுகுறித்து விசாரணையில் இரவு காவலாளி ஓம் பகதூரை தலை கீழாக கட்டிவைத்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எஸ்டேட் நிர்வாகம்
அதற்குப் பதிலாக புதிய மரக்கன்றை அதே இடத்தில் நட்டு எஸ்டேட் நிர்வாகத்திடன் வளர்த்து வந்துள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் எஸ்டேட் நிர்வாகம் மரத்தை வெட்டியது ஏன் என்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications