சீரியஸ் விஷயம்! கடவுள் காப்பாத்திட்டாரு! சென்னை பீனிக்ஸ் மாலில்- வெங்கடேஷ் பட் மகளுக்கு நேர்ந்த ஷாக்
சென்னை: சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் வெங்கடேஷ் பட்.
பொதுவாக மால்களில் நகரும் படிக்கட்டும் இருக்கும். இதை ஆங்கிலத்தில் எஸ்கலேட்டர் - Escalator என்று அழைப்பார்கள். பொதுவாக இந்த எஸ்கலேட்டர் என்பது, மக்களைக் கட்டிடங்களின் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்லும் நகரும் படிக்கட்டு அமைப்பு ஆகும்.

இது மேல்நோக்கி செல்லும், இல்லையென்றால் கீழ் நோக்கி செல்லும். இந்த படிக்கட்டுகள் உள் பக்கமாக சென்று மீண்டும் சுற்றி மேலே வரும். தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் இது நம்மை மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ கொண்டு செல்லும்.
சமயங்களில் இது போன்ற எஸ்கலேட்டர் தவறாக சென்று விபத்துகளை ஏற்படுத்தும். உதாரணமாக எஸ்கலேட்டர் சில வேகமாக கீழ் இறங்கி விபத்தை ஏற்படுத்தும். சில எஸ்கலேட்டர் வேகமாக மேலே ஏறி விபத்தை ஏற்படுத்தும். சில பாதியில் நிற்கும். சில கட்டுப்பாடின்றி அப்படியே இறங்கி கூட்ட நெரிசலில் மரணங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்து உள்ளன.,
இது போக சில சமயங்களில் எஸ்கலேட்டர் இடுக்கில் கால் மாட்டும் சம்பவங்கள் நடந்து உள்ளன. இது போன்ற சம்பவங்களில் கால்களை அகற்ற வேண்டி இருக்கும். சிலருக்கு மரணம் கூட ஏற்பட்டு உள்ளது. எஸ்கலேட்டர் இடையே இருக்கும் சிறிய இடுக்கில் புடவை கூட மாட்டும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி பல விபத்துகள் எஸ்கலேட்டரில் நடந்து உள்ளது.
எஸ்கலேட்டர் பல இடங்களில் இடுக்கு இல்லாத அளவிற்கு சிறப்பாக கட்டப்பட்டு இருக்கும். இருந்தாலும் எஸ்கலேட்டர் முடியும் அல்லது தொடங்கும் இடங்களில் சிறிய இடைவெளி இருக்கும். படிகள் உள்ளே செல்ல இந்த இடுக்கு வைக்கப்பட்டு இருக்கும். இதில் சிலர் கால்கள் உடைகள் மாட்டி விபத்து ஏற்படும் ஆபத்துகள் இங்கு உள்ளது.
என்ன நடந்தது? : இந்த நிலையில்தான் சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார் வெங்கடேஷ் பட். அதன்படி அவர் மகளுடன் பீனிக்ஸ் மாலில் எஸ்கலேட்டரில் செல்லும் போது அவரின் மகளின் செருப்பு எஸ்கலேட்டரில் மாட்டி உள்ளது. அப்படியே அவரின் கால் உள்ளே செல்லும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆனால் அவர் உடனே ஷூவை கழற்றியதால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அவரின் ஷூ பலத்த சேதம் அடைந்து உள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வீடியோவில் பேசி உள்ள வெங்கடேஷ் பட்.. இது வேளச்சேரி மாலில் நடந்தது. இங்கே வரும் போது கவனமாக இருங்கள். குழந்தைகளோடு வருபவர்கள் கவனமாக இருங்கள். நான் கவனமாக பிடித்து இழுக்கவில்லை என்றால் ஏதாவது நடந்து இருக்கும்.
இது ரொம்ப சீரியஸ் விஷயம். இப்படி எல்லாம் நடக்க கூடாது. செருப்பில் பாதி உள்ளே சென்றுவிட்டது. அப்படி இருக்கிறது அந்த படிகள். இதை பற்றி மால் நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளேன். குழந்தைகளை வைத்து இருப்பவர்கள் கவனமாக இருங்கள். மிக பாதுகாப்பாக செல்லுங்கள். இதில் உடனே நடவடிக்கை எடுத்து மாற்ற வேண்டும். இது மிகவும் சீரியஸான விஷயம், என்றுள்ளார் வெங்கடேஷ் பட்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications