விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? கூட்டத்தில் தலையில் அடித்துக்கொண்ட தொண்டர்! வெளியான புது வீடியோ
சென்னை: கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின்போது தவெக தலைவர் விஜய் மீது செருப்பை வீசியவர் யார் என்பதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. செருப்பு வீசியவருக்கு அருகில் போலீஸ்காரர் ஒருவர் கிழே மயங்கி விழுந்தவர்களுக்கு, உதவிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய்யின் கவனத்தை பெறவே செருப்பு வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், பிரசாரத்தின்போது விஜய் மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தவெக தரப்பினர் இந்த கூட்ட நெரிசல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்தனர். பிரசாரத்தின்போது யாரோ ஒருவர் விஜய் மீது செருப்பைத் தூக்கி வீசியதுதான் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படவும், நெரிசல் அதிகரித்து கட்டுக்கடங்காமல் போகவும் முக்கியமான காரணம் என்று குற்றம்சாட்டினர்.
இந்ந்நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில், கூட்டத்தின் மத்தியிலிருந்து விஜய் நின்றிருந்த பிரசார வாகனத்தை நோக்கி, செருப்பு, தண்ணீர் பாட்டில் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
செருப்பு வீசும் போது, மயங்கிய ஒருவரை மக்கள் தூக்கிக் கொண்டு செல்கின்றார்கள்.. நடிகர் @TVKVijayHQ யின் கவனத்தை ஈர்க்கவே செருப்பு வீசப்பட்டது..@AadhavArjuna pic.twitter.com/8IaF04L3v4
— N_ASHOKKUMAR (@N_ASHOKKUMAR6) October 2, 2025
குறிப்பாக, விஜய் மீது செருப்பை வீசியவர் யார் என்பதைக் காட்டும் தெளிவான காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. செருப்பு வீசியவருக்கு அருகில் தலையில் தொப்பி அணிந்த போலீஸ்காரர் ஒருவர் கிழே மயங்கி விழுந்தவர்களுக்கு, உதவிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜய்யின் கவனத்தை பெறவே செருப்பு வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே, தொண்டர் ஒருவர் தலையில் அடித்துக்கொண்டு கதறுவது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பலர் மயக்கமடைந்த நிலையில், நிலைமையை உணர்ந்து அந்த இளைஞர் கதறியதாக கூறப்படுகிறது. ஆனால், விஜய்யின் கவனத்தைப் பெற செருப்பு வீசப்பட்டபோதும் அவர் தொடர்ந்து பேச்சை தொடர்ந்ததும் வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். "செருப்பை வீசிட்டு இங்க பாருங்க... இங்க பாருங்கன்னு சைகை காட்டுகிறார். விஜய்யை தாக்கணும்னோ அவமதிக்கணும்னோ செருப்பை வீசுறவர்கள் அப்படியா செய்வார்கள்?" என நெட்டிசன் ஒருவர் இந்த வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பி உள்ளார்.
-
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. கஜனாவை நிரப்ப ரெடியான விஜய்! வேற லெவல் ப்ளானா இருக்கே ப்ரோ! -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்.. சட்டசபையில் வெளியாகும் அறிவிப்பு? விஜய் முக்கிய மீட்டிங் -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
சேரனின் சம்மட்டி அடி.. ECR-ல் விஜய் அதை பார்த்தாரா? தவெகவில் சீட் பிடிக்க லாரன்ஸின் ஹம்பக் விளம்பரம் -
தவெகவில் சேருங்கள்.. மெசேஜ் அனுப்பிய ஆதரவாளர்கள்.. சட்டென வீடியோ காலில் வந்த விஜயபாஸ்கர்? ட்விஸ்ட் -
Tamil Nadu Assembly Session LIVE: தமிழக அரசின் குறிப்புகளை அப்படியே மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”!











Click it and Unblock the Notifications