வெள்ளி நகை விலைப்பட்டியல்.. ரூ.30000 கோடி பற்றி பிடிஆர் சொன்னது விசாரிக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.. உண்மையில் சிறுபான்மையினருக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுப்பது அதிமுகதான். திமுகவின் அவப்பிரச்சாரத்தை சிறுபான்மை மக்கள் நம்பக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பரபரப்பை தந்து வருகிறது.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி உறுதி தந்திருப்பது திமுக வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது..
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணமானது, மதுரையில் மூன்றாவது நாளான நேற்று இரவு நடைபெற்றது.. மேற்கு சட்டசபை தொகுதி பழங்காநத்தத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

"அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன்பு முதல்வரின் மருமகன் சபரீசனும், துணை முதல்வர் உதயநிதியும் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளனர். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக சொன்னார்.
அதிமுக எஃகு கோட்டை மதுரை
இது குறித்து இப்போது வரை முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 வருடங்களில் ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்திருப்பதாக அமைச்சர் ஒருவரே சொல்லியிருக்கிறார் என்றால், இதில் உண்மையில்லாமல் இருக்காது. இது குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்படும். முறைகேடாக பணம் சேர்த்தது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.
மதுரை எப்போதுமே அதிமுகவின் எக்கு கோட்டையாகும்.. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து திமுக சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். இந்த நான்காண்டுகளில் திமுக ஆட்சியால் மக்கள் பட்ட துன்பங்கள் அதிகம். அதற்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
வெள்ளி விலைப்பட்டியல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற டிஜிபி சங்கர் ஜிவால், "ஓ" போட்டுக் கொண்டே ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார். தமிழகத்தில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் உள்ளது. 6 மாதங்களில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம், வெள்ளி நிலவரம் குறித்து தினமும் நாளிதழ்களில் விலைப் பட்டியல் வெளியாவது போல் தமிழகத்தில் நடந்த கொலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. போதை கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. போதை மாநிலமாகவே மாறிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த முதலில் போதை கலாசாரத்திற்கு முடிவு கட்டப்படும்.
மேயரின் கண்துடைப்பு
சொத்துவரி ஊழல் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை. இதற்கு ஒரு உதாரணம் தான் மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.200 கோடி சொத்துவரி ஊழல். திமுகவின் 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேயரின் கணவர் கண்துடைப்புக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த முறைகேட்டுக்கு முழு பொறுப்பு மேயர், கமிஷனர் தான். ஆனால் ஊழல் செய்தவர்களை இந்த அரசு காப்பாற்றுகிறது.
அடிப்படை வசதிகளுக்காக ரூ.250 கோடி மாநகராட்சி கடன் வாங்கியுள்ளது. வரி விதிப்பு என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறது.
மாநகராட்சி ஊழல் மதுரை மட்டுமல்ல பல மாநகராட்சிகளில் நடந்துள்ளது. ஊழல் பணத்தை யார் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்? டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இத்தனை பணமும் எங்கே போகிறது? இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொழில் முதலீடுகளை ஈர்க்கப்போகிறேன் என முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பறந்துவிட்டார்.
காற்றில் கூட ஊழல் செய்த கட்சி
அவர் அங்கு செல்வது தொழில்முதலீடுகளை ஈர்க்க கிடையாது.. ஊழல் மூலம் கிடைத்த பணத்தை முதலீடு செய்யவே. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
அதிமுக ஆட்சியில் எம் சாண்ட் ரூ.3500க்கு விற்றது இப்போது ரூ.5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ரூ.2 ஆயிரமாக இருந்த ஜல்லி விலை இப்போது ரூ.4500 ஆகவும், ரூ.240க்கு விற்ற சிமென்ட் விலை தற்போது ரூ.350 என கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் தத்தளிக்கின்றனர்.
திருமண உதவித் திட்டம்
அதிமுக ஆட்சியில் தான் மதுரை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அவற்றில் பல திட்டங்களை திமுக கொண்டுவந்தது போல் காட்டிக்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. கருணாநிதிக்கு நூற்றாண்டு நினைவு நுாலகம் கட்டியது தான் திமுகவின் ஒரே சாதனை. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம், மீண்டும் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும்.
அதிமுக - பாஜக கூட்டணி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்ற தோற்றத்தை வேண்டும் என்றே திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்.. உண்மையில் சிறுபான்மையினருக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுப்பது அதிமுகதான். இதனால் திமுகவின் அவப்பிரச்சாரத்தை சிறுபான்மை மக்கள் நம்பக்கூடாது.
பெண் கவுன்சிலர்
சமூக நீதியைப் பாதுகாப்பதாக திமுக கூறுகிறது. திண்டிவனத்தில் பட்டியலின அதிகாரியை திமுக பெண் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது. இவர்களா சமூக நீதியைப் பாதுகாக்க போகிறார்கள்?
ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். திட்டங்களுக்கு பெயர் வைப்பதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அளிக்கப்பட்ட மனு ஆற்றில் வீசப்பட்டுள்ளது. மனு கொடுக்க வந்த முதியவரை கிராம நிர்வாக அதிகாரி தாக்கியுள்ளார். இதனால் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்" என்று அவர் பேசினார்.
-
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு -
174 தொகுதிகளில் இரட்டை இலை.. அமித்ஷாவிடம் காய் நகர்த்திய எடப்பாடி.. 2029 கணக்கால் இறங்கி வந்த பாஜக! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?












Click it and Unblock the Notifications