ஒல்லியா..கேவலமா! எனக்கு நடந்த பாலியல் தொல்லை.. அதுவும் நண்பர்களே! கொட்டித் தீர்த்த ஜோனிதா காந்தி
சென்னை: தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இந்தியா முழுவதும் பிரபல பாடகியாக வலம் வருகிறார் ஜோனிதா காந்தி. பிரபல இசையமைப்பாளர் ஒருவருடன் காதலில் இருப்பதாக அவ்வப்போது அவர் குறித்து கிசுகிசுக்கள் கிளம்புவது வழக்கம். இந்த நிலையில் தனக்கும் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடந்திருக்கிறது எனவும், சமூக வலைதளங்களில் தான் பாலியல் தொல்லை சம்பவங்களை அனுபவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமான பாடகியாக இருப்பவர் ஜோனிதா காந்தி. பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இவர் கனடாவில் படித்தவர். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பாடி வருகிறார்.
முதன் முதலில் ஏஆர் ரகுமான் இசை கச்சேரியில் பாடிய போது தான் பிரபலமானார். சிவாஜி படத்தில் இடம்பெற்றிருந்த அதிரடிக்காரன் பாடலை உற்சாகமாக பாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது சினிமா, கச்சேரி என மிகவும் பிஸியாக இருக்கிறார்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத்தின் அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் ஜோனிதா காந்தி பங்கேற்று பாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடன் காதலில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இருவருமே அதைக் குறித்து பேசியதில்லை. ஜோனிதா காந்தி டாக்டர் படத்தில் மெழுகு டாலு நி, பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து, வாரிசு படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ஓ காதல் கண்மணி படத்தில் மெண்டல் மனதில் உள்ளிட்ட பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடப்பதாகவும், தனக்கு இன்ஸ்டாவில் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடந்ததாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர்," இந்தியாவில் பிறந்த நான் கனடாவில் தான் படித்தேன். அங்கு எனக்கு நிறைய இன பாகுபாடுகள் நடந்தது. எனது தலைமுடி, முக அமைப்பு, தோற்றம் ஆகியவற்றை வைத்து என்னை கிண்டல் செய்தார்கள். காட்ஸீல்லா போல இருப்பதாக பலர் என்னை சீண்டி இருக்கிறார்கள். பஞ்சாபில் நான் படிக்கும்போது கூட எனது உருவத்தை வைத்து கேலி செய்திருக்கிறார்கள்.
அதனால் என்னை நானே மிகவும் தாழ்வாக நினைத்தது உண்டு. இப்போது கூட எனக்கு தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது வரும். பிறகு தான் நம்மை நாம் முதலில் நேசிக்க வேண்டும். அப்போது தான் பிறர் நம்மை நேசிப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். சமூக வலைதளங்களில் பெண்களுக்கு நிறைய பாலியல் தொல்லை சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் நான் ஆக்டிவாக இருப்பேன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
எனக்கும் நிறைய மெசேஜ்கள் வரும். ஆனால் அவற்றை நான் அதிகமாக பார்க்க மாட்டேன். ஆனால் இன்ஸ்டாகிராமில் நான் பாலோ செய்யும் எனது நண்பர்கள் சிலர் என்னை அவர்களின் போஸ்ட்களில் மென்ஷன் செய்வார்கள். அந்த போஸ்ட்கள் மிகவும் ஆபாசமாக இருக்கும். வாட்டர் மார்க்காக கூட எனது புகைப்படங்களை சிலர் வைத்திருக்கிறார்கள். இப்படி பல பாலியல் தொல்லை சம்பவங்கள் சமூக வலைதளங்களில் நடந்திருக்கிறது. அதை நானும் பார்த்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications