சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை.யில் 6 பேருக்கு கொரோனா! எப்படி வந்ததுனு தெரியுமா? வெளிவந்த பரபர தகவல்..!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சரிவில் இருந்து கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடந்த சில வாரங்களில் அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நிலைத்தன்மை இல்லாமல் பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்திய அளவில் கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர்கள்.. மக்களே கவனம்.. எச்சரிக்கும் சுகாதாரத் துறை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா கிளஸ்டர்கள்.. மக்களே கவனம்.. எச்சரிக்கும் சுகாதாரத் துறை

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.

40 பேருக்கு சோதனை

40 பேருக்கு சோதனை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 40 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதி, மற்றவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்.அதில்தான் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு மருத்துவக் குழு

சிறப்பு மருத்துவக் குழு

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு மருத்துவக் குழு அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் ஆய்வு

ராதாகிருஷ்ணன் ஆய்வு

கொரோனா கண்டறியப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நோய்த் தொற்று பரவிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் அண்ணா பல்கலைக் கழகத்தை கொரோனா பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மேலும் மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

English summary
It has been reported that out of 40 students tested at the Anna University dormitory in Chennai, 6 have been confirmed to have corona infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X