சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில்.. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு "திறனறி தேர்வு!" புத்தகங்களை தேடி ஓடும் மாணவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இவ்விரு வகுப்புகளுக்கும் இறுதி தேர்வு இல்லை என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், திறனறி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக இவ்வாறு ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்ட நிலையில், திறனறித் தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

தேர்வு இல்லை

தேர்வு இல்லை

நடப்பாண்டில், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் பொது தேர்வு கிடையாது என்று சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் , அந்தந்த மாணவர்கள், குறிப்பிட்ட வகுப்புக்கான கல்வித்திறனை அடைந்து உள்ளார்களா என்பதை பரிசோதிக்க ஆன்லைன் மூலமாக சில கேள்விகளை வழங்க உள்ளார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள். வாட்ஸ்அப் மூலமாக இந்த கேள்வியை அனுப்பி உள்ளனர்.

ஆன்லைன் கேள்விகள்

ஆன்லைன் கேள்விகள்

பிளஸ் டூ மாணவர்களுக்கான பாடங்களை மாணவர்கள் படித்து உள்ளார்களா என்பதை அறிந்து கொள்வதற்கு, இதுபோல ஆன்லைன் மூலமாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. சில கேள்விகள் அனைத்துமே மிகவும் எளிமையானவை தான் இருந்தன.

வாட்ஸ்அப் கேள்வி

வாட்ஸ்அப் கேள்வி

பொதுத்தேர்வு இல்லை என்றால் மாணவர்களுக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லாமல் போய்விடும் என்பதால் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக மாணவர்களுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பி அவர்களின் விடைகளை பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. எனவே மாணவர்கள் புத்தகத்தை நோக்கி ஓட ஆரம்பித்துள்ளனர்.

தேர்ச்சி உண்டா

தேர்ச்சி உண்டா

தொடர்ந்து விடுமுறை மனநிலையிலேயே மாணவர்கள் இருந்தால் கல்வி கற்கும் திறன் போய்விடும் என்பதால் இதுபோல அவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திறனறித் தேர்வில் சரியாக விடை அளிக்காவிட்டால் தேர்ச்சி கிடையாது என்பது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu school education department says there will be a skill testing exam for the students who is studying 9th and SSLC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X