சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் அரசியல் வாழ்க்கையின் "துயரம்" இதுதான் மக்களே.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டல்

Google Oneindia Tamil News

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒரு மாநில பிரதிநிதி பேசியதை குறிப்பிட்டு, "இது எனது அரசியல் வாழ்க்கையின் துயரம்" என்று கிண்டலாக தெரிவித்தார் தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.

Recommended Video

    பெரிய மாநிலங்களில் பெறப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு கொடுக்கபடுகிறது Ptr Palanivel Thiyagrajan

    சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    பேசுவதே புரியவில்லை

    பேசுவதே புரியவில்லை

    நேற்று நிறைய மாநில நிதியமைச்சர்கள் இந்தி மொழியில் பேசினார்கள். எனக்கு ஓரளவுக்கு இந்தி புரியுமே தவிர அதிக அளவு தெரியாது. அருகே நிதித்துறை செயலாளர் இருந்ததால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்டு தெரிந்து கொண்டேன். நான் ஆங்கிலத்தில் பேசியதால் இந்தி மட்டுமே தெரிந்த நிதியமைச்சர்களுக்கு நான் பேசுவது புரிந்து இருக்காது. இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் இருப்பது ஆலோசனை கூட்டத்தில் பயன்பாட்டை குறைத்து விடும். நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு கருவிகள் கொடுக்கப்பட்டிருப்பது போல, இங்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன்.

    அரசியல் வாழ்க்கையின் துயரம்

    அரசியல் வாழ்க்கையின் துயரம்

    இன்னொரு விஷயம் சொல்கிறேன். நான் மாநிலத்தின் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், முன்பு யூனியன் பிரதேசமாக இருந்து இப்போது மாநிலமாக இருக்கிறது. மேற்கு கரையில் உள்ள சிறு மாநிலம் அது. அந்த மாநிலத்தின் மக்கள்தொகை மதுரை மாவட்ட மக்கள் தொகைக்கு பாதி. மதுரை மாவட்டத்தில் சுமார் 32 லட்சம் மக்கள் இருக்கிறார்கள் . அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 15 அல்லது 16 லட்சம் தான் இருக்கும். ஆனால் அந்த மாநில பிரதிநிதி, பேசியது பிற மாநிலங்களை விட 10 மடங்கு அதிகம். "என் அரசியல் வாழ்க்கையின் துயரம்" அவர் பேசுவதை கேட்டது. ஏனென்றால் எந்த ஒரு பலனும் இல்லாத பேச்சு. எப்படி இது ஜனநாயக முறைப்படி நியாயம்?

    உ.பி., மகாராஷ்டிரா கம்மி

    உ.பி., மகாராஷ்டிரா கம்மி

    உத்தர பிரதேசத்தில் 20 கோடி மக்களுக்கும் மேல் இருக்கிறார்கள். அவர்கள் பேசியது 5 நிமிடம் முதல் 8 நிமிடங்களாகும். மகாராஷ்டிரா மாநிலம் எவ்வளவு பெரிய மாநிலம். அவர்கள் பேசியது 10 நிமிடம். எனவே ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நிலை மாற்றப்பட வேண்டும். மக்கள் தொகை அல்லது பொருட்களின் உற்பத்தி அளவை வைத்து அந்தந்த மாநில நிதி அமைச்சர்கள் பேசுவதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

    மாற்ற வேண்டும்

    மாற்ற வேண்டும்

    பெரிய மாநிலங்களின் குரல் ரொம்பவே கம்மியாக கேட்டது. ஆனால் இந்த ஒரு நபரின் குரல் தேவைக்கு மேல் கேட்டது. என் கணிப்பின்படி 25 மடங்கு அதிகமாக கேட்டது. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டியவை. இது போன்று நடக்க கூடாது. இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

    English summary
    Tamil Nadu finance minister PTR Palanivel Thiagarajan says in the GST council meeting some small state's representative spoke more and more than big states like Uttar Pradesh and Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X