பரபரப்பான சென்னை விமான நிலையம்.. 7.6 கிலோ கஞ்சாவை காட்டிக்கொடுத்த மோப்பநாய்
சென்னை: போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பயணிகள் சோதனையின்போது மோப்பநாய் செய்த செயலால் கஞ்சாவை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை செய்யப்படுதான் வருகிறது. ஐடி இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளைக் குறிவைத்தே இதுபோன்ற செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில், காவல் துறையினர் திடீர் சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உயர் ரக கஞ்சா மோப்ப நாய் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின்போது, கஞ்சா மறைத்து வைத்திருந்த பெட்டியை மோப்ப நாய் பார்த்ததும் திடீரென தரையை தோண்டுவது போல செய்கை செய்து காவல் துறையினருக்குக் காட்டிக்கொடுத்துள்ளது. அப்போது, அந்தப் பெட்டியை எடுத்து சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டிந் தலைநகரமான பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வரும் தனியார் விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகரிகாளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் நேற்று இரவு சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். போதைப் பொருளை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாயும் சோதனைில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நள்ளிரவில் பேங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்துள்ளது. அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்துக்குக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்துள்ளார். அவர் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளை மோப்பநாய் மோப்பம் பிடித்துள்ளது. பின்னர், அதே இடத்தில் அமர்ந்து கொண்டு கால்களால் தரையைத் தோண்டுவது போல் சைகை செய்துள்ளது.
சுங்க அதிகாரிகள் அட்டைப் பெட்டிகளை சோதனை செய்து பார்த்துபோது, உயர் ரக கஞ்சா போதைப் பொருள்கள் அதில் இருப்பது தெரியவந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட 7.6 கிலோ உயர் ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா கடத்திய பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications