சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலவச திட்டங்கள் வேண்டாமா? நீங்கள் என்ன பண்ணுறீங்க.. பிரதமர் மோடியை விமர்சித்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காலத்தில் துவங்கிய இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 3 மாதம் நீட்டிப்பு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இலவச திட்டங்களை மத்திய பாஜக அரசு விமர்சனம் செய்து வரும் நிலையில் தான் இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இலவச திட்டங்கள் கூடாது என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக காங்கிரஸ் கட்சியின் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தலில் இலவசம் வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். பல்வேறு பொதுமேடைகளில் பாஜக தலைவர்கள் இதுபற்றி பேசி வருகின்றனர்.

இதற்கு திமுக, ஆம்ஆத்மி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. இது சமீபத்தில் பெரும் விவாதப்பொருளானது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

நடுராத்திரி ஓடிய செங்கோட்டையன்.. திமுகவில் 8 அதிமுக புள்ளி.. எடப்பாடி பாதிரியாரா.. பகீர் பழனிசாமிநடுராத்திரி ஓடிய செங்கோட்டையன்.. திமுகவில் 8 அதிமுக புள்ளி.. எடப்பாடி பாதிரியாரா.. பகீர் பழனிசாமி

உச்சநீதிமன்றம் வழக்கு

உச்சநீதிமன்றம் வழக்கு

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது மனுதாரரான பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில், தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் இது லஞ்சம் கொடுப்பது போன்றதாக உள்ளது என வாதிடப்பட்டது. இதற்கு ஆம்ஆத்மி, திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மக்கள் நலத்திட்டங்களை இலவசம் என கூறிவிட முடியாது. நலத்திட்டங்கள் என்பது மக்கள் நலன் சார்ந்தவை. இதனை அரசு செய்து வருவதை லஞ்சம் என கூற முடியாது என வாதிடப்பட்டது.

 இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு

இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு

இதற்கு மத்தியில் தான் இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. கொரோனா பரவலால் 2020 மார்ச் மாதம் முதல் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த திட்டம் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நாளை மறுநாள் (30ஆம் தேதி) உடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

 5 கிலோ கோதுமை-அரிசி

5 கிலோ கோதுமை-அரிசி

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 5 கிலோ கோதுமை அல்லது 5 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் பல மாநிலங்களில் கோதுமைகள் வழங்கப்பட்டு வரகிறது. இதன்மூலம் 80 கோடி பயன்பெற்று வருவதாக கூறப்பட்டு வருகின்றனர். இலவச திட்டங்கள் தொடர்பாக மத்திய பாஜக அரசு மாநில அரசுகளை விமர்சனம் செய்து வரும் வேளையில் இந்த திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தான் இந்த திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்

ஆனந்த் ஸ்ரீனிவாசன் விமர்சனம்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இலவசம் என்பது மிகவும் மோசமானது என ஒருவர் கூறி இருந்தார்'' என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். ஏனென்றால் சமீபத்திய பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி இலவச திட்டங்களுக்கு எதிராக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The central cabinet has given its approval to extend the free ration scheme which was started during the corona period for another 3 months. The free ration scheme has been extended at a time when the central BJP government is criticizing the free schemes. In this context, Anand Srinivasan, an economist of the Congress party, indirectly criticized Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X