“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு
விருதுநகர்: "படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்டு நேரில் வந்துள்ளேன்" என முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் இன்று நடந்த பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், விருதுநகரில் இன்று (ஏப்ரல் 5) நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கடற்கரை ராஜ், தங்கபாண்டியன், விஜயபிரபாகரன், அசோகன், மகாலிங்கம், ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "விருதுநகர் சட்டசபை தொகுதி தேமுதிகவை சேர்ந்த விஜய பிரபாகரன், எனது ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்த், எனது அன்புச் சகோதரி பிரேமலதா ஆகியோரின் மகன் தான் இங்கே வேட்பாளராக நிற்கிறேன். அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
விஜய பிரபாகரனுக்கு வாக்கு கேட்கும்போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த், 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில் வேட்பாளராக நடித்தார். அதில் கௌரவ வேடத்தில் நான் ஓட்டு கேட்க வருவேன். விஜயகாந்த்தை ஆதரித்து "ஆற அமர கொஞ்சம் யோசித்து பாரு.." என்ற பாடலை பாடுவேன்.
விஜயகாந்த்துக்கு ஓட்டு கேட்டு திரைப்படத்தில் நடித்தேன். இன்று அவரது அருமை மகனுக்கு வாக்கு கேட்டு நேரில் வந்துள்ளேன். விஜய பிரபாகரனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.
1988-ல் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான 'மக்கள் ஆணையிட்டால்' திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அரசியல் கதைக்களமான இந்த திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் ஸ்டாலின் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கருணாநிதி எழுதிய பாடலில் இன்றைய முதல்வர் ஸ்டாலின் நடித்திருந்தார்.
'மக்கள் ஆணையிட்டால்' படத்தில் தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்திற்காக ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார். அன்று படத்தில் வேட்பாளராக நின்று விஜயகாந்தை ஆதரித்து ஒரு பாடல் பாடி பிரச்சாரம் செய்த ஸ்டாலின் இன்று நிஜத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications