சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி பெங்களூர் போகலாம் ஜாலியா! சென்னைக்கு சீறிப் பாயும் வந்தே பாரத்! விமானம் போன்று இவ்வளவு வசதிகளா?

Google Oneindia Tamil News

சென்னை : சென்னையில் இருந்து மைசூருக்கு காட்பாடி, பெங்களூர் வழியாக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிலையில் அந்த ரயிலில் விமானம் போன்று பல வசதிகள் இருக்கின்றன. ஏன் அதை விட அதிக வசதிகள் இருக்கின்றன. அது என்னென்ன? வந்தே பாரத் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் என்பதும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி20 நாடுகள் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா.. நவ.14-ல் இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி ஜி20 நாடுகள் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா.. நவ.14-ல் இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி

 வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

இன்று பெங்களூருவில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார் இந்த திட்டம் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு இடையே சென்னை சென்ட்ரல் மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன வசதிகள்

அதிநவீன வசதிகள்

வந்தே பாரத் ரயிலை இந்தியா முழுவதும் பேசுவதற்கு என்ன காரணம் என்றால் அதில் இருக்கும் வசதிகள் தான். விமானத்திற்கு இணையான பல வசதிகள் ஏன் அதைவிட சில வசதிகள் கூடுதலாகவே வந்தே பாரத் ரயிலில் இருக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களான இது பெருநகரங்களை குறைந்த நேர கால இடைவெளியில் இணைக்கும் திறன் கொண்டவை. அது மட்டுமல்லாமல் இந்த ரயில் என்ஜின் ஆனது மற்ற ரயில்களைப் போல் அல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும்.

என்னென்ன சிறப்புகள்

என்னென்ன சிறப்புகள்

ரயில் முழுக்க மெட்ரோ ரயில்களில் இருப்பது போல தானியங்கி கதவுகள், முழுக்க முழுக்க 24 மணி நேரமும் ஏசி வசதி, அதிவேக இணைய வசதி என பல வசதிகள் உள்ளது. ஒவ்வொரு கம்போர்ட்மெண்டிலும் 32 இன்ச் எல்இடி டிவி, ரயில் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்கும் ஜிபிஎஸ் வசதி. ஆடியோ வீடியோ தகவல் வசதிகள். மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பயோ கழிவறைகள் என பல நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணம் எவ்வளவு

கட்டணம் எவ்வளவு

இது மட்டுமல்லாமல் 360 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையில் எக்ஸிக்யூட்டிவ் சேர் வசதியும் வந்தே பாரத் ரயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நீண்ட தூர பயணம் கூட எந்தவித அலுப்பும் இல்லாமல் பயணிகள் பயணத்தை ரசிக்கலாம். இதில் அதி நவீன சஸ்பென்ஷன் வசதியும் இருப்பதால் சீட்டில் கிளாஸை வைத்தால் அதிலிருந்து தண்ணீர் சிந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வசதிகளில் இருந்தும் இந்த ரயிலின் கட்டணம் 300ல் இருந்து 1900 ரூபாய்க்குள் தூரத்தை பொருத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi will inaugurate the Vande Bharat train service from Chennai to Mysore via Bangalore via Gadbadi and the train has many facilities like an airplane. Why are there more facilities than that? What is it? What are the features of Vande Bharat?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X