Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை.. வேளாண் பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் முதல் முதலாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இருந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்படி, 2024- 2025 ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

Special incentives for sugarcane farmers Minister Mrk Pannerselvam Announced in Budget

அப்பொது அவர், 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த பண்ணையத்தினால், விவசாயிகள், பயிர் சாகுபடியுடன் கறவை மாடுகள், ஆடுகள் வளர்த்தல், பழ மரங்கள், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு தற்சார்புடன் கூடிய வாழ்வாதார முன்னேற்றத்தினை அடைய முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் 40,888 ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்புகள் 142 கோடி ரூபாய் மானியத்தில் அமைக்கப்பட்டு, 40,888 விவசாயிகள் பயனடைந்து அவர்களது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. 2024-2025-ஆம் ஆண்டில் 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் சுமார் 60 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் பருத்தி தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் இந்நிலங்கள் ஊட்டச்சத்துக் குறைபாடும், குறைந்த நீர்ப்பிடிப்புத்திறனும் கொண்டதாக உள்ளதால், நிலத்தடி நீர் குறைந்து பயிர் உற்பத்தித் திறனும் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.

இம்மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இலாபகரமான சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக. சிறு தானியங்கள், உழவு பயறுவகைகள், பயிர் மேற்கொள்ளவும், எண்ணெய்வித்துக்கள் பயிரிட விதைகளும் வழங்கப்படும். 2024-2025-ஆம் ஆண்டில் மூன்று லட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த 36 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காலநிலை மாற்றம், அடுத்த 20 ஆண்டுகளில் பல்லுயிர்ப் பரவல், பயிர் உற்பத்தி. உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும். வேளாண் உற்பத்தியைக் குறையாமல் பாதுகாத்திடவும். உரிய தொழில்நுட்பங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்கி, இத்தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக்க அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பரவலாக்கம் செய்யப்படும். இதற்கென, ஒரு கோடியே 48 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

மண்ணின் வளத்தை மேம்படுத்திட பயிர்க்கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்களை வேகமாகச் சிதைத்து கரிமச்சத்தின் அளவை உயர்த்தவும். கிடைக்காத நிலையிலுள்ள சத்துகள் கிடைக்கப் பெறவும். பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் செயல்திறனும் மதிப்பிடப்படும். இதற்கென, ஒரு கோடியே 39 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். கடந்த முறை விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ. 195 வழங்கப்பட்டது. இதேபோல், முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+