விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி.. "கெட் செட் கோ!" ரெடியான திமுக ஐடி விங்க் - டிரெண்டாகும் ஹேஷ்டேக்

Subscribe to Oneindia Tamil

sports, trb raja, rajiv gandhi, udhayanidhi stalin, dmk, tamil nadu politics, cabinet minister, mk stalin, உதயநிதி ஸ்டாலின், திமுக, தமிழக அரசியல், தமிழக அமைச்சரவை, முக ஸ்டாலின், டிஆர்பி ராஜா, விளையாட்டு சென்னை: தமிழ்நாடு அமைச்சராக இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை பொறுப்பு அளிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ள நிலையில், அக்கட்சியினர் #NewHigh4TNSports என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

கடந்த 12 ஆம் தேதி தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில், "உதயநிதியை தமிழ்நாடு அமைச்சராக்க சம்மதம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பரிந்துரை செய்து இருந்தார்.

இதனை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

எந்த துறை?

எந்த துறை?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற பேச்சுக்களும் எழுந்தன. அதில், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என்று திமுக எம்.எல்.ஏவும் ஐடி விங்க் செயலாளருமான டி.ஆர்.பி. ராஜா ட்விட்டரில் பதிவிட்டு #NewHigh4TNSports என்ற ஹாஷ்டேக்கையும் பதிந்து இருக்கிறார்.

 சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர்

சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர்

அதில், "இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின். வழக்கம் போல அரசியல் நரிகளான அடிமைகளின் ஓலங்களும் சங்கிகளின் ஊளைகளும் கேட்கின்றன.

இளைஞரணிக்கு தலைமை தாங்கியவர்

இளைஞரணிக்கு தலைமை தாங்கியவர்

அவர்கள் அப்படித்தான். நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது அவரது திறமை மிகுந்த செயல்பாடுகளைத்தான். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ஒரு பேரியக்கத்தின் இளைஞரணியைத் தலைமை தாங்கி சிறப்பாக செயல்படுபவர் அமைச்சராகும்போது அந்தத் துறையைச் சார்ந்தவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுவது இயல்பு.

 உதயநிதியின் எளிமை

உதயநிதியின் எளிமை

விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் இளைஞர்கள். அவர்கள், நட்பு உணர்வுடன் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதற்கு எப்போதும் எளிமையானவராக ஆக இருக்கும் சின்னவர், அவர்களின் கோரிக்கையின் தன்மையை உணர்ந்து, உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு மிகப் பொருத்தமானவர்.

உத்வேகத்துடன் செயல்படும் விளையாட்டுத் துறை

உத்வேகத்துடன் செயல்படும் விளையாட்டுத் துறை

மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறையை வரலாறு காணாத வகையில் மேம்படுத்தி இந்திய அளவிலும் உலக அளவிலும் சாதனைகள் படைத்து, பதக்கங்களை வெல்லும் வீரர் - வீராங்கனைகளை உருவாக்குவதில் புதிய முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் வெற்றி

பிரதமர் உள்ளிட்டோர் பாராட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட் அதற்கொரு எளிமையான உதாரணம். அதிலும் சின்னவரின் பங்கு முக்கியமானது தொகுதிகள் தோறும் நவீன விளையாட்டரங்கம், சென்னைக்கு அருகே சர்வதேச தரத்திலான விளையாட்டு கிராமம், உலகளாவிய போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் என விளையாட்டுத் துறையை அணு அணுவாக கவனித்து வளர்த்து வருகிறார் முதல்வர்.

விளையாட்டுத்துறை அமைச்சர்

விளையாட்டுத்துறை அமைச்சர்

அவருக்கு உற்ற துணையாக சின்னவரைத் தந்திருக்கிறது கழகம். இது விளையாட்டுத் துறையின் பொற்காலம். விளையாட்டுத் துறை மேம்பட்டால் இளைஞர்களின் திறமை மேம்படும். வேலைவாய்ப்புகள் உருவாகும். மாநிலத்தின் திறனால் நாட்டிற்கே பெருமை சேரும். அதை நோக்கிய பெரும் பாய்ச்சலுக்குத் தமிழ்நாடு தயாராகிறது. விமர்சனங்கள் நொறுங்கும். சாதனைகள் பெருகும். இளைஞர்களே இது உங்களுக்கான ஆட்சி. காத்திருங்கள் பல புதிய முன்னெடுப்புகள் விரைவில்" என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஹேஷ்டேக்கை திமுகவினர் பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+