நடுக்கடலில் அட்டூழியம்.. பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு.. பரபரப்பு!
சென்னை: நடுக்கடலில் பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறலில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்

இலங்கை கடற்படை அட்டூழியம்
மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளை சேதப்படுத்துகின்றனர். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை சிறையில் கொண்டு அடைக்கின்றனர்.சில நேரங்களில் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். மீனவர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இந்த கொடுமைகளுக்கு இதுவரை முடிவு கிடைக்கவில்லை.

முதல்வர் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாக சென்னை வந்த பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். சமீபத்தில் டெல்லி சென்று இருந்த தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலினும் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும்படி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி இருந்தார்.

பாம்பன் மீனவர்கள்
இந்த நிலையில் இன்று பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பனில் இருந்து நேற்று இரவு ஏராளமான மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மன்னார் வளைகுடா அருகே நடுக்கடலில் இந்திய எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ஒரு விசைப் படகை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி திடீரென மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனால் மீனவர்களின் படகுகள் மிகவும் சேதம் அடைந்தது. நல்ல வேளையாக விசைப்படகில் இருந்த 9 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

மீனவர்கள் குற்றச்சாட்டு
இதனை தொடர்ந்து மீனவர்களின் வலையையும் கிழித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் அவசர, அவரசமாக பாம்பன் மீனவர்கள் கரைக்கு திரும்பினார்கள். இந்திய எல்லையில் மீன்பிடித்தபோதும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications