பாரத் மாதா கி ஜே சொன்னால்.. கு*டு வெடிக்குமா? ஸ்ரீவில்லிபுத்தூரை பதற வைத்த வீடியோ! பறந்த கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை இரவு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்ற போது, மசூதியில் இருந்த இரு இளைஞர்கள் ஶ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என கூறிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து. இதற்கிடையே கைதானவர்களை சில மணி நேரங்களில் விடுவித்தது மர்மமாக உள்ளது எனவும், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த சிலர் துாண்டிவிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை இரவு மேள தாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்மாயில் கரைக்கப்பட்டது.

Srivilliputhur Bomb Threat Vinayagar Chaturthi

முன்னதாக ஶ்ரீவில்லிபுத்தூர் மணிக்கூண்டு பகுதியில் மசூதி அருகே ஊர்வலம் வந்த போது பாடல் இசைக்கவும், மேளம் அடிக்கவும் காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தால் இந்து முன்னணியினர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

விநாயகர் ஊர்வலம்

அதன்பின் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மேள தாளம் அடித்த படி விநாயகர் சிலைகள் ஊர்வலம் அப்பகுதியை கடந்து சென்றது. ஊர்வலம் அப்பகுதியை கடந்து சென்ற பின் மசூதியில் இருந்த இரு இளைஞர்கள், "பாரத் மாதா கி ஜே என கூறி செல்வதை கேட்டு கொண்டிருக்க நாங்கள் என்ன சொம்பையா, ஶ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்" என சவால் விட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாரத் மாதா கீ ஜெய்

இருவரையும் போலீஸார் உடனடியாக அங்கிருந்து இழுத்து சென்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்துாரில், பள்ளிவாசல் முன் பாரத் மாதா கீ ஜெய் என கோஷமிட்டால் குண்டு வெடிக்கும் என இருவர் போலீசார் முன்னிலையில் மிரட்டியுள்ளனர். பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

இந்து முன்னணி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்," விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், பள்ளிவாசல் முன் பாரத்மாதா கீ ஜெய் என கோஷமிட்டால் குண்டு வெடிக்கும் என இருவர் போலீசார் முன்னிலையில் மிரட்டியுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்த நிலையில், சில மணி நேரங்களில் விடுவித்தது மர்மமாக உள்ளது. தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த சிலர் துாண்டிவிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது.

பயங்கரவாதி

உ.பி.,யில் இருந்து வந்து கோவையில் பதுங்கியிருந்த பயங்கரவாதியை அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது. அவர் மற்ற பயங்கரவாதிகளை இணைக்க சமூக ஊடகத்தை உருவாக்கி செயல்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், தமிழகம் பயங்கரவாதிகளின் பாதுகாப்பு மையமாக இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்துக்கு பேராபத்து

அரசியல் அழுத்தம் காரணமாக போலீசின் கைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும். பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+