சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.2.60 கோடிக்கு ஏலம்போன விவ்ராந்த்.. ரஷீத் கான் இடத்தில் இளம் வீரர்.. ஹைதராபாத் அணி வாங்கியது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: 2017ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரான ரஷீத் கானை ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் ஏலத்தின் போதே ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரரை எதற்காக சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரஷீத் கான் கற்பனை செய்ய முடியாத எண்ணற்ற சம்பவங்களை செய்து காட்டினார். டி20 கிரிக்கெட்டில் லெக் பிரேக் பவுலிங் எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய ரசிகர்கள் அறிந்திருந்தாலும், அவர் ஆல் ரவுண்டராக இருப்பது எவ்வளவு சாதகம் என்பதை அன்றே கண்டுகொண்டனர்.

அதன்பின்னர் ரஷீத் கானின் வளர்ச்சி சர்வதேச லீக் தொடர்களில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்தது. ஆனால் ஹைதராபாத் அணியில் இருந்து ரஷீத் கான் விலகிய போது, அவரின் இடத்தை யாரை கொண்டு பூர்த்தி செய்வது என்று தெரியாமல் ஹைதராபாத் அணி நிர்வாகம் திணறியது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தாலும், அவர்கள் எதிர்பார்த்த தாக்கம் மிகுந்த ஆட்டத்தை யாரும் கொடுக்கவில்லை.

ரொம்ப முக்கியம்.. ரத்தத்தின் ரத்தங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! புத்தாண்டில் எடப்பாடியின் ப்ளான்! ரொம்ப முக்கியம்.. ரத்தத்தின் ரத்தங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! புத்தாண்டில் எடப்பாடியின் ப்ளான்!

யார் இந்த விவ்ராந்த் சர்மா?

யார் இந்த விவ்ராந்த் சர்மா?

லெக் பிரேக் ஆல் ரவுண்டர்களான ஹசரங்கா அதிக விலைக்கு ஏலம் போவதற்கான காரணம், அவராலும் ரஷீத் கான் போல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் மட்டுமே. இந்தியாவில் லெக் பிரேக் பந்துவீச்சாளர்கள் ஏராளமானோர் இருந்தாலும், ஆல் ரவுண்டர்கள் யாரும் இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதனை போக்குவதற்காக ஹைதராபாத் அணி நிர்வாகம் தேடி கண்டுபிடித்த வீரர் தான் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 23 வயதான இளம் வீரர் விவ்ராந்த் சர்மா.

ரூ.2.60 கோடிக்கு ஏலம்

ரூ.2.60 கோடிக்கு ஏலம்

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசும்போது, விவ்ராந்த் ஷர்மா சிறந்த கூக்ளி பந்துகளையும், இமாலய சிக்சர்களை வீசுவதில் வல்லவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் விவ்ராந்த் சர்மா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதில் அடிப்படை விலை வெறும் ரூ.20 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்த 23 வயதான வீரரை, கொல்கத்தாவுடன் போட்டியிட்டு ஹைதராபாத் அணி ரூ.2.60 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் வீரர்கள்

ஜம்மு - காஷ்மீர் வீரர்கள்

ஹைதராபாத் அணிக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கும் மிகச்சிறந்த தொடர்பு உள்ளது. ஏனென்றால் இர்பான் பதான் அறிமுகம் செய்யும் வீரர்களின் திறமையை சோதிக்கும் ஹைதராபாத் அணி நிர்வாகம், உடனடியாக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தான் அப்துல் சமத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோரை ஹைதராபாத் அணி தேர்வு செய்தது.

ரஷீத் கான் இடத்தில் விவ்ராந்த்

ரஷீத் கான் இடத்தில் விவ்ராந்த்

இந்த நிலையில் விவ்ராந்த் சர்மாவும் ஜம்மு - காஷ்மீர் மாநில வீரர் என்பதோடு, ரஷீத் கான் இடத்தை நிரப்ப ஹைதராபாத் அணி திட்டமிட்டுள்ளது. இதுவரை 9 டி20 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்துள்ளார். பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும், அடித்துள்ள ரன்களை 20 பவுண்டரி மற்றும் ஏழு சிக்சர்கள் மூலமாக எடுத்துள்ளார்.

 விவ்ராந்த் ரெக்கார்ட்ஸ்

விவ்ராந்த் ரெக்கார்ட்ஸ்

இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும் என்பதோடு, பந்துவீச்சில் மூன்று போட்டிகளில் பந்து வீசி ஆறு விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் பேசும் போது கூக்ளி வகை பந்துகளை சிறப்பாக வீசுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை ஹைதராபாத் அணிக்காக விவ்ராந்த் சிங் சிறப்பாக ஆடும்பட்சத்தில், இந்திய அணியில் இடம் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

English summary
In 2017, Sunrisers Hyderabad signed Rashid Khan, a young player from Afghanistan. During the IPL auction, many people asked why Sunrisers team bought the player from Afghanistan. Now after Rashid Khan, Hyderabad team Signed Jammu - kashmir Cricketer Vivrant Sharma for his Place. Lets see Vivrant sharma Cricket Journey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X