அரசு பள்ளியில் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு.. "யாராக இருந்தாலும்.." கண்கள் சிவந்த அன்பில் மகேஷ்.. பரபர
சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்ற நபர் பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் நேற்றைய தினம் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றினார்.

மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு: ஆன்மீக தேடல் குறித்துப் பேசிய தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு, தன்னை உணர்தல் என்பது குறித்துப் பேசியிருந்தார். அங்கிருந்த மாணவ- மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்துள்ளார். அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீர்விட்டுள்ளனர். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன் என்றெல்லாம் அவர் பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு ஆசிரியர் மட்டும் வந்து மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பள்ளியில் வந்து எதற்காக மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றிப் பேசுகிறீர்கள்.. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மற்ற ஆசிரியர்கள் வந்து கேள்வி எழுப்பிய ஆசிரியரை மட்டும் சமாதானம் செய்தனர். மகா விஷ்ணுவும் தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார்.
கொந்தளித்த நெட்டிசன்கள்: தொடர்ந்த அவர், "இத்தனை காலம் ஆசிரியர்கள் சொல்லித் தராததை நான் தருகிறேன்.. நியாயப்படி நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், என்னுடன் வாக்குவாதம் செய்கிறீர்கள்" என்றெல்லாம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை மகா விஷ்ணுவே தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
மகா விஷ்ணு என்ற இந்த நபரின் பேச்சு இணையத்தில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை எப்படி அனுமதிக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதற்கிடையே அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த சொற்பொழிவு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
அன்பில் மகேஷ்: பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சையாகப் பேசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சர்ச்சை கருத்துகளைப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், தமிழ்நாடு முழுக்க அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவித்தார்.
அரசு பள்ளியில் ஆன்மீக போதனை? மாணவர்களை அழ வைக்கும் மகா விஷ்ணு.. கொதிக்கும் நெட்டிசன்கள்.. சர்ச்சை!
கடும் நடவடிக்கை: இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றைய தினம் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இங்கே நேரில் வந்துள்ளேன். பள்ளி குழந்தைகளை நேரில் பார்த்துப் பேச உள்ளேன். இந்த விவகாரத்தில் காரணமானவர்கள் மீது அடுத்த 3, 4 நாட்களில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை என்பது மற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இருக்கும்.
ஆசிரியர்களையும் நேரில் அழைத்துள்ளேன். அவர்களையும் நேரில் சந்திக்க உள்ளோம். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications