நாகப்பாம்பு கடித்து.. 2வது ஊசி போடும்போது அவர் பாட்டுக்கு கிளம்பிட்டாரு.. 100 பாம்பை பிடிச்சவராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்பை பார்த்தாலே பயந்து நடுங்கும் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஆனால், பாம்புகளை பிடிப்பதையே வழக்கமாக வைத்திருந்த ஒருவருக்கு, தான் பிடித்த நாகப்பாம்பால் இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதைவிட அதிர்ச்சி, பாம்பு கடித்த பிறகு அவர் எடுத்த முடிவுதான்.. என்ன நடந்தது ஒடிசா மாநிலத்தில்?

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் காந்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் குமார் பிரதான்.. 28 வயதாகிறது.. இவர் பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்.

Cobra Bite Snake Rescuer Stunning Decision

நாகப்பாம்பு

குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துவிட்டால், தபன் குமாருக்கு அங்குள்ள பொதுமக்கள் போன் செய்வார்களாம்.. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாம்புகளை பிடித்து பத்திரமாக மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட பாம்புகளைப் தபன் குமார் பிடித்துள்ளார்.. அதிலும் விஷப்பாம்புகளை இவர் கையாளும் விதமே வித்தியாசமாக இருக்குமாம்.. அப்படிப்பட்ட விஷப்பாம்புகளை மீட்பதை, வீடியோக்களாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஷேர் செய்தும் வந்துள்ளார்..

3 முறை தீண்டிய பாம்பு

இப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 2 மணிக்கு, தபன் குமார் ஒரு நாகப்பாம்பை பிடித்திருக்கிறார். வழக்கம்போல அந்தப் பாம்பை கையில் வைத்துக்கொண்டு, தனது வீட்டின் வராண்டாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்கவும் தொடங்கியிருக்கிறார்..

அப்போது திடீரென ஆக்ரோஷமடைந்த அந்த நாகப்பாம்பு, தபன் குமாரின் வலது கை விரல்களில் கடித்தது... தொடர்ந்து முழங்கை மற்றும் மேல் கைப் பகுதிகளிலும் அடுத்தடுத்து கடித்து விட்டது.. சில நொடிகளிலேயே பல இடங்களில் பாம்பு கடித்ததால் நிலைமை சீரியஸாக மாறியது.. பாம்பு கடித்த பிறகும், தபன் குமார், அதை உடனே கீழே விடாமல், பெட்டிக்குள் பாதுகாப்பாக அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்குள் பாம்பு கடித்த விஷம், அவரது உடம்பில் ஏற ஆரம்பித்துள்ளது..

2வது ஊசி

இதை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர், தபன்குமாரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கு அவருக்கு முதலுதவியாக ஊசி ஒன்று செலுத்தப்பட்டது... இந்த ஊசி உடம்பில் ஏறி, அடுத்த 10 நிமிடங்களுக்கு பிறகு இன்னொரு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

ஆனால், தபன் குமார் டாக்டர்கள் பேச்சை கேட்கவில்லை. இதைவிட ஆபத்தான பாம்புகளையெல்லாம் நான் பிடித்திருக்கிறேன்.. எனக்கு அனுபவம் நிறைய இருக்கிறது.. அதனால் இந்த விஷம் எனக்கு எதுவும் ஆகாது என்று சொன்னாராம்.. அத்துடன் 2-வது ஊசியை போட்டுக்கொள்ளாமலேயே மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கும் திரும்பியிருக்கிறார்..

வீட்டுக்கு திரும்பிய கொஞ்ச நேரத்தில் தபனின் உடல்நிலை, மோசமடைய துவங்கியிருக்கிறது.. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக பூரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், தபன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விஷம் ஏறி விபரீதம்

பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவம் வாய்ந்த 28 வயது இளைஞர், சில மணி நேரங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் அந்தப் பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.. தபனின் உடல் மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. மறுநாள் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது..

தபன் குமாரை பொறுத்தவரை, நீண்ட காலமாகப் பாம்புகளைப் பிடித்து வந்தவர்.. எனினும் விஷப்பாம்புகளை கையாள்வதில் அனுபவம் இருப்பது மட்டுமே பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. அதேபோல, சோஷியல் மீடியாவில் லைக்ஸ், வியூவ்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது குறித்தும் கவலை எழுந்துள்ளது.

ஹைதராபாத் சம்பவம் நினைவிருக்கா

சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. நண்பர்களை பயமுறுத்துவதற்காக சிறிய நச்சுப்பாம்பை கையில் பிடித்து விளையாடியிருக்கிறார் 30 வயது தொழிலதிபர் நவாப் சையத் குமைஸ் மைதீன் ஹுசைனி. நண்பர்கள் எச்சரித்தும் கேட்காமல் பாம்பை வைத்து விளையாடி கொண்டிடேயிருந்தார்.. திடீரென அந்தப் பாம்பு அவரது வலது கை கட்டை விரலில் கடித்துவிட்டது.

நண்பர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அவரை வரும்படி அழைத்தும் தொழிலதிபர் மறுத்து விட்டாராம்.. இது சாதாரண கடிதான் என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார் ஹுசைனி.. அடுத்த 1 மணி நேரத்தில் தொழிலதிபருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.. அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் தொழிலதிபர் இறந்துவிட்டார். மனைவியும் 2 குழந்தைகளும் இவரது உடலை கண்டு அழுதது காண்போரை கலங்கடித்தது.

எப்போதுமே, முறையான பயிற்சி, பாதுகாப்பு உபகரணங்கள், அவசர மருத்துவ உதவி ஆகியவை முக்கியம் என்று பாம்பு மீட்புப் பணியில் இருப்பவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அதுமட்டுமல்ல, பாம்பு பிடிப்பவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட வேண்டும், அவர்களின் பணிகளைக் கண்காணிக்க வேண்டுமென்றும் பாம்பு மீட்புப் பயிற்சியாளர் சுபேந்து மல்லிக் வலியுறுத்தியுள்ளார்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+