சென்னையில் கார் மோதி எஸ்.ஐ. உயிரிழப்பு... பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை..!
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதியதில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரை சேர்ந்தவர் பிரசன்னா. தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப காவல் உதவி ஆய்வாளராக வண்டலூரில் பணியாற்றி வரும் இவர், நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அதி வேகத்தில் வந்த எஸ்.யூ.வி. ரக கார் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னா மீது மோதியது. அதில் நிலைகுலைந்து போன அவர், படுகாயங்களுடன் துடிதுடித்துள்ளார். இதையடுத்து போலீஸார் மற்றும் அப்பகுதி மக்கள் பிரச்சன்னாவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் துரதிர்ஷடவசமாக சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்திய கார் உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் வடபழனியில் உள்ள தனது இல்லத்திலிருந்து அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கார் மோதி உயிரிழந்த விவகாரம் சென்னை காவல்துறையினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. இதனிடையே இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த டெக்னிக்கல் எஸ்.ஐ. பிரசன்னாவுக்கு 25 வயது மட்டுமே ஆகிறது. மிக இள வயதில் தனது திறமையை கொண்டு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், தனக்குள் எத்தனை ஆசைகளை கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை.
காவல் உதவி ஆய்வாளர் பிரச்சன்னாவின் உடற்கூராய்வு முடிந்து அவரது சொந்த ஊரான கோலியனுருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எத்தனையோ வம்பு வழக்குகளில் தலையிட வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு அதில் தலையிடும் பட்சத்தில் அவர்களுக்கான எதிரிகளும் அதிகரிக்கத் தொடங்குவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications