சூப்பர் மூன்..இன்று வானத்திலே பெரிய நிலா...பிரகாசமாக தெரிவதை கண்டு ரசிக்கலாம்

2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று இரவு வானில் தோன்றும். சாதாரண நாட்களை விட நிலா பிரகாசமாக இருக்கும் வானமும் மிகவும் தெளிவாக இருக்கும். இந்த நிகழ்வை உலகின் எல்லா பகுதிகளிலும் தெரியும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022ம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்று இரவு வானில் தோன்ற உள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நீடிக்கும். இந்த பௌர்ணமி அன்று நிலவு பூமியை சற்று நெருக்கமாக வருவதால் இப்படி பெரிய நிலவாக, பிரகாசமாக தோன்றும் என்று கூறப்படுகிறது.

ஆனி மாதம் பெளர்ணமி வானில் அதிசய நிகழ்வாக, சாதாரண நாட்களை விட நிலவும், வானமும் மிகவும் தெளிவாக காணப்படுமாம். இந்த நிகழ்வை உலகின் எல்லா பகுதிகளிலும் பார்க்கலாம்.

இந்தாண்டில் மிகப்பெரிய சூப்பர் மூன் இன்றைய தினம் மிகப் பிரகாசமாக தெரிய உள்ளது. இந்த பெரிய நிலவிற்கு 'பக் சூப்பர் மூன்' அல்லது, 'தண்டர் மூன்' அல்லது 'ஹே அல்லது 'மெட் மூன்' என்று பெயரிட்டுள்ளனர்.

பூமிக்கு அருகில் நிலவு

பூமிக்கு அருகில் நிலவு

பூமிக்கு மிக அருகே ஆண்டுக்கு 3 அல்லது 4முறை நிலவு வரும்போது, சூப்பர் நிலவு தோன்றும். பூமி கோளுக்கு அருகே நிலவு வரும்போது, வழக்கத்தைவிட 17 சதவீதம் அளவில் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும் இருக்கும். இன்றைய தினம் நிலவு பூமியில் இருந்து 3,57,264 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் மூன்

சூப்பர் மூன்

சூப்பர் மூன் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறைவரை தோன்றலாம். சூப்பர் மூன் வழக்கத்தைவிட 17 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் ஒளி அதிகமாகவும்இருக்கும். கடந்த மாதம் சூப்பர் மூன் உருவானது, அதற்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் அந்த சூப்பர் மூன் இந்தியாவுக்கு நெருக்கமாக இல்லை. ஆனால், இந்த சூப்பர் நிலவை இந்தியாவில் வியாழக்கிழமை அதிகாலையிலிருந்து பார்க்க முடியும்.

பூமிக்கு அருகில் நிலா

பூமிக்கு அருகில் நிலா

நாசாவின் அறிக்கையின்படி, இன்று புதன்கிழமை பிற்பகலில் இருந்து சூப்பர் மூன் வெளிப்படும். சூரியனுக்கு எதிராக வெளிப்பட்டு பூமிக்கு நிலவு காட்சியளிக்கும். நாசாவின் கணக்கின்படி, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வானில் இருக்கும்.

பெயர் வைத்தது யார்

பெயர் வைத்தது யார்

இன்றைய தினம் தோன்றும் பக் சூப்பர் மூன், ஏறக்குரைய 6ஆயிரம் கி.மீ குறைவாக பூமிக்கு அருகே வருவதால், வழக்கத்தைவிட பெரிதாக நிலவு தோன்றும் கடந்த 1979ம் ஆண்டு ரிச்சர்ட் நோலே எனும் வானியல் நிபுணரால் வைக்கப்பட்ட பெயராகும்.

அடுத்த சூப்பர் மூன் எப்போது

அடுத்த சூப்பர் மூன் எப்போது

2022ம் ஆண்டில் 3 வது சூப்பர் மூன் ஆகஸ்ட் மாதத்தில் வரும். அதன்பின் 2023 ஜூலை 3ம் தேதி சூப்பர் மூன் வானத்தில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மூன் நிகழ்வால் கடல், பெருங்கடல்களில் சில இடங்களில் அதிக அளவில் அலைகள் மேலெழும்பும். வானியலாளர்களின் கூற்றுப்படி, இந்த நேரத்தில் கடலின் கொந்தளிப்பால் கடலோர கிராமத்தில் தண்ணீர் உள்ளே புக வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+