சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூடுபிடிக்கும் அதிமுக பொதுக்குழு விவகாரம்! ராஜேந்திர பாலாஜி பங்கேற்பதில் சிக்கல்! பரபர பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அவர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

முன்னதாக அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்.

“நம்பர் சொல்லுங்க.. அப்போதானே என்னனு சொல்ல முடியும்” எச்.ராஜாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்ளை!“நம்பர் சொல்லுங்க.. அப்போதானே என்னனு சொல்ல முடியும்” எச்.ராஜாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்ளை!

அதிமுக ராஜேந்திரபாலாஜி

அதிமுக ராஜேந்திரபாலாஜி

சில நாட்களுக்கு பிறகு வழக்கு விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது, ராஜேந்திரபாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மனு தாக்கல்

மனு தாக்கல்

அதில் ஜூன் 22ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரி உ அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள தனக்கு ஜூன் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது

நீதிமன்றத்தில் கோரிக்கை

நீதிமன்றத்தில் கோரிக்கை

அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் கலந்து கொள்வதற்காக குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மனு தள்ளுபடி

மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்த்தில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் நிபந்தனைகளை இடைகாலமாக நீக்கி 5 நாள் தளர்வு வழங்க கூறியதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனால் ராஜேந்திர பாலாஜி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
The Supreme Court has rejected a petition filed by former minister Rajendra Balaji seeking permission to attend the AIADMK general body working committee meeting in Vanagaram, Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X