சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திக்திக் ட்விஸ்ட்.. மேட்சை மாற்றிய ஷாருக்கான்.. கடைசி பாலில் சிக்ஸ்.. தமிழ்நாடு சாம்பியனானது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி மீண்டும் சாம்பியன் ஆகியுள்ளது. வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட போட்டியை தமிழ்நாடு பினிஷர் ஷாருக்கான் மாற்றி அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.

தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் கடந்த சில வருடங்களாவே லோக்கல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த வருடம் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் ருத்ரதாண்டவம் ஆடினார்.

சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு! சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

10 பாலில் மேட்சை மாற்றுவது. கடைசி ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடித்து ஆட்டத்தை மாற்றுவது இவரின் வழக்கம். இதன் காரணமாகவே பஞ்சாப் அணி 5 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்து இவரை ஐபிஎல்லில் அணியில் எடுத்தது.

அதிரடி

அதிரடி

இந்த நிலையில்தான் இந்த வருடமும் ஷாருக்கான் தமிழ்நாடு அணியில் மிக சிறப்பாக பினிஷ் ரோலில் ஆடினார். பொதுவாகவே நாக் அவுட் போட்டிகளில் ஷாருக்கான் நன்றாக ஆடுவார். அதேபோல் இந்த முறையும் காலிறுதி போட்டியில் வெறும் 9 பந்தில் 19 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்தார். அதன்பின் தமிழ்நாடு அணி செமி பைனலில் வென்று பைனலுக்கு வந்தது.

பைனல்

பைனல்

பைனலில் பரம வைரியான கர்நாடகாவை தமிழ்நாடு எதிர்கொண்டது. கடந்த வருடத்திற்கு முந்தைய சீசனில் கர்நாடகாவிடம் பைனலில் தமிழ்நாடு தோல்வி அடைந்தது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக இன்று தமிழ்நாடு வெற்றிபெறும் முனைப்பில் இருந்தது. தமிழ்நாடு அணியின் பவுலிங் இன்று நன்றாகவே இருந்தது.

சாய்

சாய்

முதலில் பேட்டிங் இறங்கிய கர்நாடக அணியில் கருண் நாயர், மணீஷ் பாண்டே என்று எல்லோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். பிரவீன் துபே 33, அபினவ் 46, சுசித் 7 பாலில் 18 என்று கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால் அந்த அணி 151-7 ரன்கள் எடுத்தது. கர்நாடக அணியின் டாப் ஆர்டரை கலங்க வைத்து சாய் கிஷோர் 4 ஓவரில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

எப்படி

எப்படி

இதன்பின் இறங்கிய தமிழ்நாடு அணி அதிரடியாக தொடக்கம் கொடுத்தது. ஜெகதீசன் 41 ரன்கள், ஹரி நிஷாந்த் 23 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதன்பின் இறங்கிய விஜய் சங்கர் உட்பட வீரரால் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து திணறினார்கள். இதனால் 15 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்து தமிழ்நாடு திணறிக்கொண்டு இருந்தது.

 பினிஷர்

பினிஷர்

அதன்பின்தான் பினிஷர் ஷாருக்கான் களமிறங்கினார். முதலில் நிதானம் காட்டியவர் பின்னர் அதிரடியாக ஆட தொடங்கினார். மற்ற வீரர்கள் ஒரு பக்கம் அவுட் ஆக ஷாருக்கான் மட்டும் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார். 19 ஓவரில் இவர் அடித்த சிக்ஸ், பவுண்டரி காரணமாக தமிழ்நாடு அணி 14 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.

அதிரடி சிக்ஸ்

அதிரடி சிக்ஸ்

முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷாருக்கான் அடுத்தடுத்து சிங்கிள், 2 ரன்கள், வைட் காரணமாக அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரஷரான ஆட்டத்தில் கடைசியில் சிக்ஸ் அடித்து மேட்சை முடித்தார்.

வெற்றி

வெற்றி

தமிழ்நாடு தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட மேட்சில் இதில் திரில் ட்விஸ்ட் ஏற்பட்டது. இதனால் இரண்டாவது முறையாக தமிழ்நாடு அணி சாம்பியன் ஆகியுள்ளது. அதோடு ஷாருக்கான் தன்னை ஒரு பினிஷர் என்று சையது முஷ்டாக் தொடரில் மீண்டும் நிரூபித்துள்ளார்.

English summary
Syed Mushtaq Ali trophy: How Shah Rukh Khan made Tamilnadu win against Karnataka in finals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X