வேகமாக பரவும் கொரோனா பிஏ5.. அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன? ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
சென்னை: இந்தியாவில் புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் மாதிரியான பிஏ5 வகை வைரஸின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Recommended Video
இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
திடீரென கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமைக்ரான் எனப்படும் கொரோனா வைரஸின் மற்றொரு மாதிரியான பிஏ4, பிஏ5 வகை வைரஸ் தான் அதிகமாக பரவி வருகிறது. இது வேகமாக பரவும் தன்மையுடையது. ஆனால் பொதுமக்கள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிஏ5 வகை வைரஸ் தமிழகத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 5 சதவிகிதம் மட்டுமே இருந்த பிஏ5 வகை, ஜூன் மாதத்தில் 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஏபி5 வகை வைரஸால் தீவிர பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்பட்டாலும், அதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

அறிகுறிகள் என்ன?
பிஏ5 வகை கொரோனா வைரஸ் குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், பிஏ5 வகை வைரஸால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும். தொண்டை வலியும், உடல் வலியும் கடுமையாக இருக்கும். கடந்த அலைகள் போல் அல்லாமல் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி
தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர் உள்நோயாளிகளாக கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் 3 பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பூசியில் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு நோய் பாதிப்பு தீவிரமாக உள்ளது என்று தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு எச்சரிக்கை
இதேபோல் தொற்று நோய் நிபுணர் சுரேஷ் குமார் கூறுகையில், பூஸ்டர் டோஸ் போடாத இணை நோய்கள் கொண்ட முதியவர்களுக்கு பிஏ5 வகை கொரோனா மற்றும் டெல்டா வகை வைரஸ்கள் தீவிர பாதிப்பையே ஏற்படுத்துகிறது. அதே போல் இளைஞர்கள் குறைந்தது இரண்டு டோஸ் செலுத்தியிருக்க வேண்டும். முக்கியமாக நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள், பயணம் மேற்கொள்பவர்களுக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

அலட்சியம் கூடாது
தொடர்ந்து பேசிய அவர், எத்தனை முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், எத்தனை முறை கொரோனா வந்திருந்தாலும் மீண்டும் பாதிப்பையே ஏற்படுத்துகிறது. எனவே அலட்சியமாக இருக்க வேண்டாம். தற்போது பரவும் கொரோனா வகை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தினாலும் மறதி, நுரையீரல் திறன் குறைதல் உட்பட நீண்ட கால பாதிப்புகள் என்னென்ன ஏற்படும் என யாருக்கும் தெரியாது. அதனால் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகும் என்று எச்சரித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications