Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நலம் வளம் பெருகட்டும், மகிழ்ச்சி மன நிம்மதி நிலவட்டும் - தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிலவட்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் வா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளில் பக்தியுடனும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துள்ளனர். விநாயகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிலவட்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா, நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வீடுகளில் பொதுமக்கள், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 Tami Nadu Political leaders extend greeting Vinayagar Chathurthi

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளில் பக்தியுடனும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்கள் நற்காரியங்களை தொடங்கும்போது தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர் . விநாயகரை துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி விளையும் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார திருநாளாம் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம்பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அருகம்புல், செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும், வீடெங்கும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிலவட்டும் என்று வாழ்த்தி விநாயகர் சதுர்த்தி திருநாளில் விமர்சையாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரது வழியில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 Tami Nadu Political leaders extend greeting Vinayagar Chathurthi

டிடிவி தினகரன் வாழ்த்து

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்துச்செய்தியில்,முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடும் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு நல்ல செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது வழக்கம். அந்தளவுக்கு எளிய மக்களின் கடவுளாக, நினைத்ததைப் பிடித்து வைத்து வழிபடக்கூடியவராக, விருப்பப்பட்டபடி எல்லாம் பெயர் வைத்து கொண்டாடப்படுபவராக இருப்பது விநாயகரின் தனிச்சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

மனவளம், உடல்நலம்,சொல்வளம், பொருளாதார மேன்மை என நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் விநாயகரை வழிபட்டால், கிடைக்கும் என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார். அவரது வாக்கினைப் போலவே இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் அனைவருக்கும் துன்பங்கள் அகன்று, வளமும் நலமும் பெருகட்டும். அமைதியும் அன்பும் உலகில் தழைத்தோங்கட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+