தமிழகத்தில் அதிகரித்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை! வாக்காளர்களுக்கு சூப்பர் ஏற்பாடு! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75,032 -ல் இருந்து 75,088 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு வாக்குச் சாவடியில் 1200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் எண்ணிக்கை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 கிலோ மீட்டருக்குள் சென்று வாக்களிக்கும் அளவுக்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 56 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பின்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, 01.01.2027 தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட சிறப்பு சுருக்கமுறைத் திருத்த நடவடிக்கைகள் 15.10.2026 முதல் 04.01.2027 வரை மேற்கொள்ளப்படுகின்றன.

Election Commission

அந்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக, 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 38 மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்தி, அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள்/கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு, வாக்குச்சாவடிகளின் பட்டியலை தயாரித்துள்ளனர்.

மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை சீரமைக்க, தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் அனுப்பியுள்ளனர்:-

(i) வாக்காளர் எண்ணிக்கை 1200 க்கும் அதிகமாக உள்ள பாகங்களில் புதிய வாக்குச்சாவடியை உருவாக்குதல்.

(ii) பாகங்களுக்கிடையே பிரிவுகளை மறுசீரமைத்தல் மற்றும் பிரிவுகளை உருவாக்குதல்

(iii) வாக்குச்சாவடிகளின் அமைவிடம்/கட்டிடம் மாற்றம்

(iv) வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம்

(v) வாக்குச்சாவடிகளை இணைத்தல்.

4. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பின்வரும் அம்சங்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை 1200-க்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு வாக்காளரும் 2 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்பதற்காக, வாக்குச்சாவடி 2 கிலோமீட்டர் வட்டாரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம், மருத்துவமனை, கோவில் அல்லது பிற மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எந்த வாக்குச்சாவடியும் அமைக்கப்படவில்லை. 200 மீட்டர் தூரத்திற்குள் எந்தவொரு வாக்குச்சாவடியின் அரசியல் கட்சி அலுவலகம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் ஒரே பிரிவிலும், ஒரே இடத்திலும் வைத்திருக்கப்படுகின்றனர்.

5. மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல், தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

6. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு முன், மாநிலத்தில் 75032 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு மாநிலத்தில் 75088 வாக்குச்சாவடிகள் உள்ளன.

7. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் வாக்குச்சாவடிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இருந்த வாக்குச்சாவடிகள் - 75,032, புதிதாக உருவாக்கப்பட்டவை - 134, இணைக்கப்பட்டவை - 78, இடமாற்றம் செய்யப்பட்டவை - 357, பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டவை - 491, நிகர அதிகரிப்பு - 56, தற்போதைய மொத்த வாக்குச்சாவடிகள் - 75,088. மேலும், ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெறும் வகையிலும், வாக்காளர்கள் 2 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+