சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வரவேண்டாம்... சனி ஞாயிறு லீவு - சத்யபிரதா சாகு

Google Oneindia Tamil News

சென்னை: வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

Tamil nadu assembly election 2021: Candidates must abide by the election rules says Satya Pratha Sahu

இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அழைக்கலாம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது என்று தெரிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகளில் மொத்தம் 4,79,892 தேர்தல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை 76 அரங்குகளில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50% வாக்குச்சாவடிகள் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆணையம் கூறும் இதர 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என கூறினார்.

English summary
Chief Electoral Officer Satyaprada Sahu said that only 2 persons will be allowed to come with the candidate to file their nomination papers and the candidates filing their nomination papers will have to abide by the election rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X