திமுக Vs அதிமுக.. கோட்டையில் கொடி நாட்டப் போவது யார்? தென் மாவட்டங்களில் யாருக்கு செல்வாக்கு?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற இருக்கும் நிலையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆட்சி அமைக்க உதவும் தென் மாவட்டங்களில் பெருவாரியான தொகுதிகளை வெல்பவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் யாருக்கு அங்கு பலம்? எந்த கட்சி பலவீனமாக இருக்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்..
கடந்த சில தேர்தல்களைப் போலவே இந்த முறையும் தென் மாவட்டங்களில் யாருக்கு பலம்? எந்த கட்சி பலவீனமாக இருக்கிறது? வாக்கு வங்கி அரசியலே முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக முக்குலத்தோர், நாடார் மற்றும் பட்டியலினத்தோர் சமூகங்களின் வாக்குகள் எந்தக் கட்சிக்குச் செல்கின்றன என்பதே பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

இதனால் தான் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் இந்த வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் தென் மாவட்டங்கள் அதிமுகவின் வலுவான கோட்டையாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், கட்சிக்குள் ஏற்பட்ட பிரிவினைகள் போன்ற காரணங்களால் அந்த ஆதரவு மெதுவாக குறைந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட திமுக கடந்த தேர்தலில் பல இடங்களில் முன்னிலை பெற்றது. இந்த முறை அதிமுக தரப்பில் கூட்டணி கணக்குகள் சிக்கலான நிலையில் இருந்தாலும், சில முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன. குறிப்பாக தினகரன் மீண்டும் கூட்டணிக்குள் வந்தது ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தனித்தனி நடவடிக்கைகள் அதிமுக வாக்கு வங்கியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
சில இடங்களில் வாக்கு பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மற்றொரு பக்கம் திமுகவும் அமைதியாக இருக்கவில்லை. சமூக அடிப்படையிலான வாக்கு வங்கிகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை களத்தில் இறக்கியுள்ளது. குறிப்பாக சமூக தலைவர்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது, கூட்டணியை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் நெருக்கடியான தொகுதிகளிலும் வெற்றி பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், இந்த தேர்தலில் புதிய காரணி எனக் கருதப்படுவது நடிகர் விஜயின் அரசியல் வருகை. அவர் தொடங்கியுள்ள கட்சி நேரடியாக பல தொகுதிகளில் போட்டியிடுவதால், பாரம்பரிய வாக்கு கணக்குகள் மாற்றமடையும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடம் இவரின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.
மொத்தத்தில் பார்க்கும்போது, தென் மாவட்டங்களில் யார் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதே தமிழகத்தில் அடுத்த அரசு யார் அமைப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும். வாக்கு பிளவு, கூட்டணி மாற்றங்கள், சமூக அரசியல் கணக்குகள் என பல்வேறு அம்சங்கள் கலந்து இந்த முறை தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று நேரத்தில் முன்னிலை நிலவரங்கள் தெரிய வந்துவிடும். தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை அள்ளுபவர்கள் தான். இந்த தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டப் போகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications