அப்போ 5000 கேட்டீங்களே.. இப்போ 1000 தானா? திமுக அரசின் பொங்கல் ’பொய்’ தொகுப்பு! அண்ணாமலை காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசின் அறிவிப்பு ஏமாற்று வேலை எனவும், ஆட்சிக்கு வருவதற்கு முன், பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அந்த கோரிக்கையை மறந்து விட்டார்கள் போல என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை கூடுதலாக வழங்க வேண்டுமெனவும், தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம் பல்லி இருந்த புளி, பருத்திக்கொட்டை கலந்த மிளகு என்ற பொங்கல் தொகுப்பை வழங்கி மாபெரும் சாதனை புரிந்தது திறனற்ற திமுக அரசு, இந்த ஆண்டு, மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு சென்ற வருடம் வழங்கப்பட்ட தரமற்ற பொங்கல் பரிசை இந்த ஆண்டு தவிர்த்தமைக்கு பொது மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்ணாமலை பாஜக

அண்ணாமலை பாஜக

தமிழகத்தில் உள்ள 2.16 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2356.67 கோடி ரூபாய் செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்ற செய்தியை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 1000 ரூபாய், 1 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தால், கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் ஆதார விலையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த திறனற்ற திமுக, அந்த வாக்குறுதியை மறந்தது மட்டும் அல்லாது அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது, தேசிய உழவர் தினமான இன்று, திமுக, விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு அரசு கொள்முதலை எதிர்நோக்கியிருந்த விவசாயிகளின் நிலையை பற்றி திமுகவுக்கு என்ன கவலை. சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்த கூட்டத்திற்கு விவசாயியின் வலி என்ன தெரியும்?

5000 ரூபாய்

5000 ரூபாய்

ஒரு கிலோ அரிசி 21 ரூபாய்க்கும் ஒரு கிலோ சர்க்கரையை 31 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யும் தமிழக அரசு, வழங்கப்படவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இந்த பொருட்களின் விலை 76 ரூபாய் என்று கணக்கு காட்டியுள்ளதையும் இந்த அரசு பொது மக்களுக்கு விளக்க வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன், பொங்கல் பரிசாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமான திரு மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வரும் இப்போது அந்த கோரிக்கையை மறந்து விட்டார்கள் போல கொடுத்த வாக்குறுதிகளை மறந்த இவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை மட்டும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது

பனை வெல்லம்

பனை வெல்லம்

பனை வெல்லம் மற்றும் பனை பொருட்களை நியாய விலை கடைகளில் விநியோகம் செய்வோம் என்று அறிவிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு வருடமாக உறங்கி கொண்டிருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு. அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை ஆகும்" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+