மார்ச் 18ஆம் தேதி தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.. தனியாக வேளாண் பட்ஜெட்
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
2022 - 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நடத்துவது குறித்த கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஏற்கனவே நடைபெற்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்த வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கனவே தயாராகி விட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் 2022 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 18ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் தமிழக வேளாண் பட்ஜெட் மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications