தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.10.62 லட்சம் கோடி.. இடைக்கால பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு விளக்கம்!
சென்னை: 2026-27ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்கான சுமார் ரூ.9,500 கோடி மாநில அரசின் மொத்த கடன்களின் பகுதியாக தொடர்ந்து வருவதாகவும், மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக மீது அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிக கடன் பெறுவதற்கான விமர்சித்து வந்தன. இதனால் தமிழக அரசின் கடன் குறித்த விவரங்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி தங்கம் தென்னரசு பேசுகையில், ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில் மத்திய அரசு மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் நடத்திய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.

இடைக்கால பட்ஜெட்
ஆனால் இந்த அரசு எதிர்கொண்டு வரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்றாகும். தமிழ்நாட்டிற்கு பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை மறுப்பது,. மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைப்பது, மாநிலங்களுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் வரி விகிதங்களை சீரமைப்பது அல்லது நியாயமற்ற நிபந்தனைகளுடன் கூடிய திட்டச் செலவுகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்துகிறது.
தங்கம் தென்னரசு விளக்கம்
இப்படி ஒவ்வொரு வழியிலும் தமிழ்நாட்டின் நிதிநிலையை செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களின் ஆட்சேபணைகள் மற்றும் எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைப்பதற்கு, ஜிஎஸ்டி வரி அமைப்பு ஒப்புதல் அளித்தது.
வருவாய் இழப்பு எவ்வளவு?
இதனால் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நடைமுறை முடிவடைந்ததால், ஏற்கனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளுக்கு இடையில் இந்த வரி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிபந்தனை
2025-26ஆம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் ரூ.1,202 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனம் பிரிவு 293(3)ன் படி மாநில அரசுகள் தங்களுக்குரிய கடனை திரட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கான அதிகாரத்தை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள உத்தரவாதங்களில் 5 சதவிகிதத்தை உத்திரவாத மீட்பு நிதியத்திற்கு மாற்ற வேண்டும் என்று முன்னறிவிப்பின்றி நிபந்தனை விதித்துள்ளது.
மத்திய அரசின் பாரபட்சம்
இதனால் தமிழக அரசுக்கு ரூ.3,087 கோடி எதிர்பாராத மற்றும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் இயக்கத்திற்கு ரூ.3,112 கோடி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் ரூ.2,246 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கான சுமார் ரூ.9,500, மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன்களின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வருகிறது. 2025-26ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகாளில் ரூ.9.29 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன், 2025-26ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் ரூ.9.52 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு?
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் கணக்குகளில் இடம்பெற வேண்டிய ரூ.9,522.65 கோடியும் இதில் அடங்கும். மாநில அரசின் கடன் செயற்கையாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த தொகை நீங்கலாக திருத்த மதிப்பீடுகளில் உள்ள கடன் ரூ.9.42 லட்சம் கோடியாகவும், நிலுவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.10.62 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications