அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்.. இனி ரூ.7.5 லட்சம் வரை பிரச்சனை இல்லை! பட்ஜெட் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை இன்றைய தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்த சூழலில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.. இந்த புதிய திட்டத்தின் மூலம் அடிப்படை மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாசம் அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதை தொடர்ந்து கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தவெக வெற்றி, இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது.. விஜய் அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

நிதியமைச்சர் மரியா வில்சன் இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக திருமணமாகும் தாலிக்கு தங்கம் மற்றும் பட்டுப்புடவை, கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதேபோல அரசு ஊழியர்கள் குறித்தும் சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அடிப்படை மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட தீவிர நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரையும், அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் வரையும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 2,992 வகையான சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.838 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
தமிழக அரசு மீது அரசு ஊழியர்களின் அதிருப்தி அதிகரித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், அதை சமாளிக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பை விஜய்யின் தவெக அரசு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
