பாவயாத்திரையா? முதல்வர் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் தேடட்டும்.. பாய்ந்து வந்த அண்ணாமலை
சென்னை: தமிழக மக்களை வஞ்சித்து திமுக ஏராளமான பாவங்களை செய்துள்ளது. இதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் ராமேஸ்வரத்திற்கு பாவ யாத்திரை சென்று கடலில் நீராடி சிவனை வேண்டி பரிகாரம் தேடட்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். அண்ணாமலையின் இந்த பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். பாதயாத்திரை துவக்க விழாவில் பேசிய அமித்ஷா தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அமித்ஷாவின் விமர்சனத்திற்கு இன்று பதிலடி கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின், அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை இல்லை என்றும் பாவ யாத்திரை எனவும் 2002 இல் நடந்த குஜராத் கலவரம், தற்போது நடந்த மணிப்பூர் வன்முறைக்கு பாவ மன்னிப்பு கேட்கும் யாத்திரைதான் அது" என்று சூடாக பதிலடி கொடுத்தார். இந்த நிலையில், பாவயாத்திரை என விமர்சித்த முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த என் மண் என் மக்கள் நடைபயணம், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் 'நிதி'களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர்.
மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன. 2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.
பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications