எல்லோரும் இனி ஓனராகலாம்! டாஸ்மாக் பார் டெண்டரில் புது ரூல்ஸ்! சிஎம் விஜய் எடுத்த மிகப் பெரிய முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பார்கள் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, தமிழக அரசு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பார்களுக்கான குறைந்தபட்ச பரப்பளவு 15ல் இருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் பார் அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் தினமுன் ரூ.150 கோடி முதல் 200 கோடிக்கும் அதிகமான வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது என்பது குறுப்பிடத்தக்கது.

TASMAC

இதுவே தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விஷேச தினங்கள் என்றால் இது 400 முதல் 500 கோடியாகக் கூட இருக்கும். இந்த நிலையில், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார்.

முதல்வர் விஜய்

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருந்தார். சொன்னது போலவே டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார்.

மதுபானக் கடை

இது பெண்களுடைய பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பார்கள் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு, தமிழக அரசு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டாஸ்மாக் பார்

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில்,, 'தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003'-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக, இதுவரை டாஸ்மாக் கடைகளுக்குள் அல்லது கடையை ஒட்டியே மட்டுமே பார்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் கடைக்கு அருகிலோ அல்லது அந்தக் கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள்ளோ பார்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பார் டெண்டர்

மேலும், பார்களின் குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரிலிருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் இடவசதி ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல், 15 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பார்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படுவதுடன், பார்கள் செயல்பாட்டில் நிர்வாக தாமதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாணை

பார் அமைக்க 205 சதுர அடி இடம் கட்டாயம். டாஸ்மாக் பார் டெண்டரில் அனைவரும் பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பார்களை நடத்தும் நிலை மாறும். மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் பார்களுக்கான இடம் முடிவு செய்யப்படும். மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+