சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா?
சென்னை: சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்ததை அவருக்கு ஆதரவாக நின்ற பெரும்பாலானவர்கள் விரும்பவில்லையாம். இதனால் சமீபத்தில் தம்மை ஆதரிக்கும் பாமகவினரிடம் நேர்காணல் நடத்தியிருந்தார் ராமதாஸ்.
அவர்களில் தொகுதிக்கு இருவரை தேர்வு செய்து தனித்தனியாக, "உங்களுக்கு சீட் ஒதுக்கலாம்னு இருக்கேன். எவ்வளவு செலவு செய்ய முடியும்? " என்று நேற்று கேட்டுள்ளார். இருவரும் ஒரே மாதிரி, "செலவு செய்ய பணம் இல்லை. எனக்கு சீட் வேண்டாம் அய்யா" என்று மறுத்து பேசி விட்டனர்.

ராமதாஸ் வியப்பு
யாருமே போட்டிப் போட விரும்பவில்லை. இதனால் ஏகத்துக்கும் அப் - செட்டாகியிருக்கிறார் ராமதாஸ். ஜி.கே. மணி, அருள் ஆகிய சிட்டிங் எம்.எல்.ஏ.க்களே, போட்டியிட ஆர்வம் காட்டாதது ராமதாஸை மிகவும் நொந்து போக வைத்துள்ளதாம். இந்த நிலையில், தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து மணியும் அருளும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, சசிகலாவுடன் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை விரும்பாத நிர்வாகிகள், மீண்டும் அன்புமணி தரப்பிடமே சென்று விடலாமா? என யோசித்து வருவதாகவும் பாமக தரப்பில் எதிரொலிக்கிறது.
விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
துரோகிகளை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றைப் புள்ளியில் இவர்கள் இருவரையும் இணைத்துள்ளது என்கிறார்கள். ராமதாஸ்-சசிகலா சந்திப்பில், தேர்தல் செலவுகளுக்கு எம்மிடம் பணம் இல்லை என்கிற புலம்பல் பாட்டை ராமதாஸ் பாடியிருக்கி றார். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்; கவலைப்படாதீர்கள் என்று நம்பிக்கைக் கொடுத்துள்ளார் சசிகலா.
234 தொகுதிகளிலும் போட்டி
234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று சொல்லப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்றும் ராமதாசுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம், 134 தொகுதிகளில் பாமகவும், 100 தொகுதிகளில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியும் போட்டியிடலாம் என சசிகலா சொல்லியிருக்கிறார். அதனால்தான் 134 தொகுதிகளில் போட்டியிட தங்கள் தரப்பில் ஆட்கள் இருக்கிறார்களா? என ஆராய்ந்துள்ளது தைலாபுரம் தோட்டம்.
வடக்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் மட்டுமே போட்டியிடுவதாக இருந்தால் 134 தொகுதிகளுக்கு ஆட்களை நிறுத்தி விட முடியும். ஆனால், தமிழகம் முழுவதும் தானே தொகுதிகளை பரவலாக பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியிருக்கையில் தென் தமிழகத்தில் நமக்கு ஆட்களே இல்லையே ? அதனால் தென் மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு எங்கே போவது ? என ஜி.கே.மணியிடம் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டி
இதனையடுத்துத்தான் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம் என்கிற பேச்சு தைலாபுரம் தோட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து சசிகலாவிடம் ராமதாஸ் விவாதித்திருக்கிறார். அப்போது, தென் மாவட்டங்களில் எந்தெந்த தொகுதிகளுக்கு உங்களிடத்தில் ஆட்கள் இல்லையோ அங்கு எங்கள் சார்பில் சிலரை அறிமுகம் செய்கிறோம் . அவர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் எங்களுக்கு வேட்பாளர்கள் இல்லாத போது உங்களிடம் இருந்தால் அவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என ஒரு வித்தியாசமான டீலிங் பேசப்பாடிருக்கிறது.
ஆக, ராமதாஸ்-சசிகலா கூட்டணி உருவாகி விட்டாலும், வேட்பாளர்கள் பஞ்சம் அவர்களின் இருவர் தரப்பிலும் உருவாகியிருக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்
-
வாரிசுகளின் போட்டியால் பரபரக்கும் பென்னாகரம்.. ராமதாஸ் மகன் Vs ஜி.கே. மணி மகன்? - யார் பலம்? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications