சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை உடைஞ்சுறும்! சேட்டையை ஆரம்பித்த சேட்டன்கள்! மார்ஃபிங் வீடியோ மூலம் மிரட்டல்!

Google Oneindia Tamil News

சென்னை : முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிட்டது போல கேரளாவில் மீண்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    முல்லைப் பெரியாறு அணை உடைஞ்சுறும்! மார்ஃபிங் வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கனும் - ஆர் பி உதயகுமார்

    கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கேரளாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தின் உயிர்நாடியாக உள்ளது இந்த அணையின் மூலம் தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நேரடியாகவும் சில மாவட்டங்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன.

    ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய அரசுக்கும், திருவாங்கூர் சமஸ்தான மன்னர் விசாகம் திருநாள் ஆகியோர்க்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு அணையைக் கட்டிப் பராமரித்துக் கொள்வதுடன் அந்த அணையிலிருந்து கிடைக்கும் நீரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் ஆங்கிலேய அரசுக்கு அளிக்கப்பட்டது.

    முல்லைப் பெரியாறு.. மக்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்!முல்லைப் பெரியாறு.. மக்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் கடிதம்!

    முல்லைப் பெரியாறு அணை

    முல்லைப் பெரியாறு அணை

    இதன்படி ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டுமானக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நோய் பரவலால் தொழிலாளர்கள் 483 பேர் உயிரிழந்த நிலையில் இந்த அணைக் கட்டுமானச் செலவுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்கித்தர ஆங்கிலேய அரசு மறுத்தது. இந்நிலையில் ஆங்கிலேய அரசின் கட்டுமானப் பொறியாளராக இருந்த இராணுவப் பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுவிக் அவரது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்று அவரது சொந்தப் பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்.

    மக்கள் போராட்டம்

    மக்கள் போராட்டம்

    முதலில் ஆங்கிலேய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ்நாடு அரசுக்கும் கேரளா அரசுக்கும் இடையேயான ஒப்பந்தமாக மாறியது கடந்த 1979 ஆம் ஆண்டு அணை பாதிப்படைந்ததாக மலையனோரமா எனும் நாளிதழ் செய்தி வெளியிட்ட நிலையில் அணையில் நீர் திறக்க அளவு குறைக்கப்பட்டது. சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு கேரளா அரசு நீர்த்தேக்க அளவை 136 அடியாக குறைத்த நிலையில் இரு மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடி ஏற்பட்டதோடு இரு மாநில மக்களுக்கும் இடையே போராட்டங்கள் தொடங்கியது.

    கேரளா பிடிவாதம்

    கேரளா பிடிவாதம்

    முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வரும் நிலையில் அணை பலமாக இருப்பதாக கண்காணிப்பு குழுவினர் உறுதி செய்தனர். ஆனாலும் அணைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கேரள நடிகர் நடிகைகள் கூட அணைக்கு எதிராக அவதூறு பரப்பி சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

    மார்ஃபிங் வீடியோ

    மார்ஃபிங் வீடியோ

    அணை உடைந்து விடும் எனவே அதனை உடைக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி மக்களிடம் அச்சுறுத்தலை பரப்பி வருகின்றனர். மேலும் அணை உடைந்தால் எப்படி இருக்கும் என ஒரு வீடியோவை உருவாக்கி சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வரும் நிலையில் அணைக்குறித்தான அச்சம் கேரள மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் அஸ்லின் என்பவர் இயக்கி இசையமைத்துள்ள ஒரு அனிமேஷன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

     தமிழக விவசாயிகள்

    தமிழக விவசாயிகள்

    அணை உடைந்து வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து குழந்தைகள், பொதுமக்கள், வன உயிரினங்கள் பாதிக்கப்படுவதாக கற்பனை காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக விவசாயிகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுனர். தமிழக அரசுடன் நல்லிணக்கமாக இருப்பது போல கேரளா அரசியல்வாதிகள் பேசி வந்தாலும் அணை விவகாரம் என வரும்போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன் எனவும் இதுகுறித்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது.

    English summary
    While there is a demand to take measures to store more water in the Mullaip Periyar Dam, videos are again being circulated on social media in Kerala as if the Mullaip Periyar Dam has broken and the farmers of Tamil Nadu have demanded that steps be taken to remove it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X