Udayachandran IAS: தமிழக நிதித் துறை செயலாளர் உதயசந்திரன் அப்பல்லோவில் அட்மிட்! எப்படி இருக்கிறார்?
சென்னை: தமிழக நிதித் துறை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் உதயசந்திரன். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் இளம் வயதிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். இதையடுத்து இவர் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும் பல்வேறு பிரிவுகளின் செயலாளராகவும், ஆணையராகவும் இருந்துள்ளார்.

எந்த துறையில் இருந்தாலும் அதில் ஒரு புரட்சி செய்துவிடுவது இவருடைய வழக்கம். மிகவும் நேர்மையான அதிகாரி. இவர் தருமபுரி ஆட்சியராக இருந்த போது பதற்றமான இரு கிராமங்களில் எந்த பிசிறும் தட்டாமல் தேர்தலை முடித்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குட்வில் புக்கில் இடம் பெற்றிருந்தார்.
அது போல் டிஎன்பிஎஸ்சி செயலாளராக இவர் இருந்த போது, ஓஎம்ஆர் ஷீட் எனும் நடைமுறையை கொண்டு வந்தார். அது போல் ஒரு முறை பதிவு செய்யும் முறையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வந்தார்.
பின்னர் கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த போது இவர், 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என்ற பட்டியல் வெளியிடுவதை நிறுத்தினார். இது மற்ற குழந்தைகளுக்கு மன உளைச்சலை தரும் என்பதால்!
மேலும் பிளஸ் 2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வு என இருந்த நிலையில் பிளஸ் 1 தேர்வையும் பொதுத் தேர்வாக்கி, அதில் 600 மதிப்பெண்கள், 12 ஆம் வகுப்பு தேர்வில் 600 மதிப்பெண்கள் என்பதை கொண்டு வந்தார். டிஆர்பி தேர்வில் நடந்த பிரச்சினையை உதயசந்திரன் கண்டுபிடித்ததால் அவரது இலாகா மாற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து #We Support Udhayachandran என்ற ஹேஷ்டேக் பிரபலமானது.
இதைத் தொடர்ந்து அவர் தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை செயலாளராக இருந்தார். அப்போதும் அவர் தனது திறமையை காட்டினார். தமிழ் இலக்கியங்களை டிஜிட்டல் முறைக்கு கொண்டு வந்தார். கீழடி அகழ்வாய்வு குறித்தும் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வரின் தனிச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சிறப்பு திட்டத்தின் செயலாளராகவும் இருந்தார். பின்னர் இவர் நிதித் துறை செயலாளராக மாற்றப்பட்டார். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பணத்தை ஒதுக்கும் முக்கிய துறை இது!
இந்த நிலையில் கடந்த வாரம் உதயசந்திரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவரது இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய அடைப்பை நீக்கும் வகையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்டென்ட் வைத்த பிறகு, உதயசந்திரன் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், சில நாட்களுக்கு வீட்டில் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications