21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. 10 நாட்களில் அடுத்தடுத்து ஆர்டர்.. தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு!
சென்னை: 21 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் மேலும் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாடு அரசு 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பணி உயர்வு வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 7 பேருக்கு பதவி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பின் தமிழ்நாடு உளவுத்துறை அளித்த அறிக்கையும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய கருணாசாகர், காவலர் நலப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் காவலர் நலப்பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை மைலாப்பூர் துணை ஆணையர் ரோகித் நாதன் ராஜகோபால், சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி. மேகலினா ஐடேன், தென் மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் தென்காசி காவல் கண்காணிப்பாளராக சாம்சனும், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் எஸ்பியாக இருந்த முத்தரசி, சிபிசிஐடி எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி எஸ்பி செந்தில் குமார் அமலாக்கத்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்பியாக இருந்த செல்வராஜ், சிவகங்கை மாவட்ட எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications