சரவெடி உத்தரவு! தனியார் பள்ளிகளுக்கு கிடுக்குப்பிடி..தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆர்டர்! என்ன தெரியுமா?
சென்னை: தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்க கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் திறந்துள்ளன. கேஜி பள்ளி உள்ளிட்ட சிறார்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடைசி டேர்ம் கட்டணம் கட்ட வேண்டும் என்று மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகள் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் கொரோனா காலம் என்பதால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகின்றன.
மாணவிகளுக்கு கிடைத்த நீதி! சென்னை தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடி அபராதத்துடன் தடை .

பள்ளி கட்டணம்
இதனால் மாணவ, மாணவியர் பலர் சரியாக கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர் வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. பீஸ் கட்டும் வரை வகுப்பிற்கு வர கூடாது என்று பல பள்ளிகளில் மாணவ , மாணவியர் வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்க கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

என்ன உத்தரவு
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கருப்பசாமி அனுப்பி உள்ளார். அதில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை பள்ளி நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும். கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்க கூடாது.

புகார் நடவடிக்கை
இவர்களை தண்டிப்பது போன்ற புகார்கள் எங்களிடம் வந்தால் அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற புகார்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக தனியார் பள்ளிகள் எங்களிடம் உறுதி மொழி எடுக்க வேண்டும். அதேபோல் பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்களை அவமதிக்க கூடாது. அவர்களுக்கு கடுமையான நெருக்கடிகளை வழங்க கூடாது.

தரக்குறைவு
அவர்களிடம் எந்த வகையிலும் தரக்குறைவாக பேச கூடாது. இது பற்றி முறையாக உறுதி மொழி எடுக்க வேண்டும். இது தொடர்பாக உறுதி மொழி எடுத்து, அந்த சான்றிதழை உடனே பள்ளிக்கல்வித்துறைக்கு தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும். ஆனால் அப்படி சான்றிதழ் அளித்தும் கூட தொடர்ந்து பள்ளி கட்டணம் அளிக்காத மாணவர்களை வெளியே நிற்க வைத்தாலோ, அவர்களை தண்டித்தாலோ, அப்பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications