சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கலோ பொங்கல்.. ரேசன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய்! இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு? ஹாப்பி நியூஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொருட்களாக அல்லாமல் ரொக்கமாக வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இன்று அல்லது நாளை அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.

தூள்.. தமிழக மக்களே.. பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்! விரைவில் முதல்வரிடமிருந்து வருகிறது குட்நியூஸ்? தூள்.. தமிழக மக்களே.. பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்! விரைவில் முதல்வரிடமிருந்து வருகிறது குட்நியூஸ்?

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமற்றதாக இருந்ததாகவும், வெல்லம் போன்றவை உருகிய நிலையில் இருந்ததாகவும், ஒரு பரிசு தொகுப்பில் இருந்த வெல்லத்தில் பல்லி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது.

விமர்சனம்

விமர்சனம்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இது குறித்து பேசியிருந்தனர். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.இதில் அதிக குளறுபடி நடந்ததாக சமூக வலைதளங்களின் மூலமாகவும் கடும் விமர்சனம் செய்யப்பட்டது. மேலும் இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பாஜக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது.

 இந்தாண்டு ரொக்க பரிசு

இந்தாண்டு ரொக்க பரிசு

இந்த நிலையில் தான், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் தராமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆதார் இணைப்புடன் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்த ஆலோசிக்கப்பட்டது.

இன்று அறிவிப்பு?

இன்று அறிவிப்பு?

ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதன் காரணமாக, ரொக்கமாகவே ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்க அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரொக்கமாக கொடுக்கும் போது சிக்கல்கள் குறையும் என்பதோடு மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை வழங்கும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

English summary
While the family card holders have been given goods for the Pongal festival, the Tamil Nadu government is planning to give cash instead of goods for the Pongal festival in 2023. It is expected that an announcement will be made today or tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X