யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரம் காட்டிய, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பணியிடமாற்றம்
சென்னை: யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டதாக மக்களால் பாராட்டு பெற்ற இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் எஸ்.பி.அமரித் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றவர் இன்னசென்ட் திவ்யா.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர் நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

சுற்றுச்சூழல்
மலை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காப்பதற்கு பெரும் முயற்சிகளை முன்னெடுத்தார். தூய்மை இந்தியா பணிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவற்றில் மும்முரம் காட்டினார். நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்கள் தனியார் ரிசார்ட் மற்றும் கேளிக்கை விடுதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இதனால் யானைகள் தடம்மாறி வேறு பகுதிகளுக்கு சென்று மக்களோடு மோதும் சூழ்நிலை உருவானது.

யானை வழித்தடங்கள்
யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அதில் கலெக்டர் திவ்யா ஒருவராகும். மிகச் சிறப்பாக பணியாற்றி ஆக்கிரமிப்பாளர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறினார். இந்த நிலையில் 2019ம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை, பணியிட மாற்றம் செய்ய அப்போதைய அதிமுக அரசு முயற்சி செய்ததை, அறிந்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.

பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை
உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில்தான் திமுக அரசு அமைந்த பிறகு பணியிடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு பணியிட மாற்றம் அவசியம் என்று கூறி உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு.

இன்னசென்ட் திவ்யா மாற்றம்
இதையடுத்து இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில்தான் நேற்று இரவு தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் அமரித் நீலகிரி மாவட்டத்தில் கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்னசென்ட் திவ்யாவிற்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. பொதுவாக மூன்று வருடங்கள் ஒரு மாவட்டத்தில் ஒருவர் கலெக்டராக தொடர்வார். இன்னசென்ட் திவ்யா நான்கரை ஆண்டு காலம் கலெக்டராக தொடர்ந்து இருக்கிறார். ஆனால் இவரது பணியிடமாற்றம் யானைகள் வழித்தடம் மீட்பு விஷயத்தில் பின்னடைவை ஏற்படுத்துமா, அல்லது வழக்கம்போல பணிகள் நடைபெறுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த ஒரு அதிகாரியை பணி இடமாற்றம் செய்வது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் நீலகிரி மாவட்ட மக்களால் முன் வைக்கப்படுகிறது.
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications