தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சிறுபான்மையினர் நலத்துறையின் சிறப்பு செயலாளராக செயல்பட்ட கலை அரசி இடமாற்றம் செய்யப்பட்டு, சீர்மரபினர் நலத்துறையின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சிப்காட் செயல் இயக்குநராக கேத்தரின் சரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசுப் பணியில் 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர், இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் மட்டும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதில் 9 மாவட்ட ஆட்சியர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையராக கலை அரசி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் நில நிர்வாகம் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநராக மகேஸ்வரி, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளராக சரவண வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக மோகன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநராக சிவராசு, தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக ராஜேந்திர ரத்னு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) செயல் இயக்குநராக கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல்












Click it and Unblock the Notifications