சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தம்

அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் தொகை 2022 மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருடத்தில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக வழங்கப்படும். இந்த நிலையில் அந்த 15 நாட்கள் விடுமுறை எடுக்காத பணியாளர்களுக்கு அந்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆண்டு முடிவில் வழங்கப்படும் இந்த சம்பளம் எந்த பிடித்தமும் இன்றி வழங்கப்படும். இதனை பணியாளர்கள் 2 ஆண்டுகள் கழித்து 1 மாத ஊதியமாக கூட பெற்றுக் கொள்ளலாம்.

Tamil Nadu govt suspends earned leave encashment

இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்த அரசாணை ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டும் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் தொகை 2022 மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இரண்டாவது ஆண்டாக ஈட்டிய விடுப்பு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

English summary
The Government of Tamil Nadu has announced that the amount of paid leave for government employees will be suspended for one year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X