பெங்களூரின் அஸ்திவாரத்தை ஆட்டும் ஓசூர்.. வெறும் 26 கிமீ.. வருது மெகா ஏர்போர்ட்! பிளானை பாருங்க!
ஓசூர்:ஓசூரில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான திட்டங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஆரம்பகட்டமாக, இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. பெரிகை மற்றும் பாகலூர் இடையே இந்த விமான நிலையம் அமைய உள்ளது.
இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். ஆரம்பத்தில் ஒரு டெர்மினல் மற்றும் இரண்டு ஓடுபாதைகளுடன் அமைக்கப்பட்டு, தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,300 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்த திட்டத்திற்கு, அரசுக்கு ஏற்கனவே 650 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது.

ஓசூர் விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ள தமிழ்நாடு அரசு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய விமான நிலையத்திற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளது.
பெங்களூருவுக்கு அருகில் அமைந்துள்ள வளர்ந்து வரும் தொழில்துறை நகரமான ஓசூரில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு பிரத்யேக விமான நிலையத்தை அமைக்கும் இத்திட்டத்திற்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து பல அனுமதிகளில் முதலாக தள அனுமதி தேவைப்படுகிறது.
அரசுக்கு ஏற்கனவே 650 ஏக்கர் நிலம்
பாதுகாப்பு அமைச்சகத்திடம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, தமிழ்நாடு அரசு மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்பியுள்ளது. ஜூன் மாதத்தில் முதன்முறையாக அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு,
ஓசூர் பகுதியின் வான்வெளி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளதால், அமைச்சகம் உடன்படவில்லை.
பெங்களூரு விமான நிலையம் மற்றும் தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) ஆகியவற்றின் வான்வெளி ஏற்கனவே HAL வான்வெளியுடன் ஒன்றுடன் ஒன்று overlapping ஆக உள்ளது. இருப்பினும், தலைமைச் செயலாளர், ஓசூர் விமான நிலையத்திற்கும் இது எப்படி சாத்தியம் என்பதை விளக்கி, அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)
"இந்த விமான நிலையமும் மற்றவற்றுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான காரணங்களை நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். தற்போது அவர்களின் பதிலை எதிர்பார்த்துள்ளோம்" என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். ஓசூர் விமான நிலையத்திற்கான இட அனுமதி கிடைப்பதற்கு குறைந்தது ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பரந்தூர் விமான நிலையத்திற்கு இட அனுமதி பெற தமிழ்நாடு அரசுக்கு ஓராண்டுக்கும் மேலாக ஆனது. மத்திய அரசிடம் இருந்து இட அனுமதி கிடைத்த பிறகு, அடுத்ததாக கொள்கை ரீதியான ஒப்புதலை அரசு பெற வேண்டும்.
பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட்
பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இடையே உள்ள ஒப்பந்தம் காரணமாக, பெங்களூரு விமான நிலையத்தின் 150 கி.மீ. வான்வெளி தூரத்திற்குள் வேறு எந்த விமான நிலையத்தையும் அமைக்க தடை உள்ளது. இதனால், ஓசூர் விமான நிலையத்தில் பயணிகள் சேவையை தொடங்க மேலும் எட்டு ஆண்டுகள் ஆகலாம்.
ஓசூர் ஏற்கனவே ஒரு மின்னணு மற்றும் உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது. அத்துடன், புதிய முதலீடுகளையும் ஈர்த்து பொருளாதார மையமாக வேகமாக மாறி வருகிறது. இந்த புதிய விமான நிலையம், மேம்பட்ட பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்புடன் பெங்களூரு விமான நிலையத்தின் மீதான சார்பு தன்மையை குறைக்கும்.
மேலும், இந்த விமான நிலையம் இம்மையத்தின் வளர்ச்சியை மேம்படுத்தி, மாநிலத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும்.












Click it and Unblock the Notifications