Tamil Nadu Lok Sabha Election Results LIVE: விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை- தேமுதிக மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை: விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு தாக்கல் செய்துள்ளதாக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் ரிசல்ட் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

டெபாசிட் இழந்த கட்சிகள்
அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
பாஜக 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
பாமக 10 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்தது
தமாக 3 இடங்களில் டெபாசிட் இழந்தது
தேமுதிக 2 இடங்களில் டெபாசிட் இழந்தது
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடின.
பாஜக 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
பாமக 10 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்தது
தமாக 3 இடங்களில் டெபாசிட் இழந்தது
தேமுதிக 2 இடங்களில் டெபாசிட் இழந்தது
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடின.
கனிமொழி பாஜகவில் இணைந்தால் நான் பதவி விலகுவதை பற்றி பரிசீலனை செய்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, 2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என திமுக எம்.பி கனிமொழி நேற்று கூறியிருந்தார்.
அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று, 2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல என திமுக எம்.பி கனிமொழி நேற்று கூறியிருந்தார்.
திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மடல்
இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. கொள்கை உறுதியும், இலட்சியப் பார்வையும், திட்டமிட்ட உழைப்பும், தெளிவான வியூகமும் இருந்தால் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் வெல்லவும் முடியும், அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
- முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 5 பெண் வேட்பாளர்கள் வெற்றி!
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி, தென்காசியில் ராணி ஸ்ரீகுமார், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், கரூர் தொகுதியில் ஜோதிமணி மற்றும் மயிலாடுதுறையில் சுதா என திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட 5 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சசிகாந்த் செந்தில்
திருவள்ளூரில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் சசிகாந்த் செந்தில் வெற்றி
சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டும் காலி
தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மாணிக்கம் தாகூர்
விருதுநகரில் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரனை வென்றார்
READ MORE














Click it and Unblock the Notifications