சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. டாஸ்மாக் கடைகள் மூடல்? அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: ஓமிக்ரான் பரவல் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்,

Recommended Video

    மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. டாஸ்மாக் கடைகள் மூடல்? அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவல்

    தமிழ்நாட்டில் தற்போது ஓமிக்ரான் கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஜூலி வந்தால் நமக்கு ஜாலி... கொண்டாடும் நெட்டிசன்கள்... ஆரம்பமே இப்படியா ஜூலி வந்தால் நமக்கு ஜாலி... கொண்டாடும் நெட்டிசன்கள்... ஆரம்பமே இப்படியா

     டாஸ்மாக் கடைகள்

    டாஸ்மாக் கடைகள்

    தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன. 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு பொது இடங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் வரும் காலத்தில் கொரோனா பரவல் நிலை பொறுத்து கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

     அமைச்சர் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     மின் இணைப்பு

    மின் இணைப்பு

    இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 26,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 74,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல 8950 மின்மாற்றிகள் அமைக்கும் பணிகளில் ஏற்கனவே 8021 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

     பில்லர் பெட்டிகள்

    பில்லர் பெட்டிகள்

    மழைக்காலங்களில் பில்லர் பெட்டிகள் எளிதில் பழுதடைந்து விடுவதால் அவர்களை உயர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட 340 பில்லர் பெட்டிகள் 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு மின்வாரியம் முழுவதும் கணினி மயமாக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் ஒரு கோடி மின் இணைப்பு தாரர்களின் தொடர்பு எண்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது 2. 99 கோடி மின் இணைப்பு தாரர்களின் தொடர்பு எண்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

     டிரான்ஸ்பார்மர்

    டிரான்ஸ்பார்மர்

    எங்காவது திடீரென மின் கசிவு ஏற்பட்டாலோ, மின் விபத்து ஏற்பட்டாலோ தானியங்கி முறையில் டிரான்ஸ்பார்மர் ஆப் ஆகும்படியான முறை அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் மின் கசிவு ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று டிரான்ஸ்பார்மர் நிறுத்தவேண்டிய அவசியம் இருக்காது. தானியங்கி முறையில் டிரான்ஸ்பார்மர் ஆஃப் ஆகிவிடும். விரைவில் சென்னை 100 சதவீத புதைவட கம்பிகள் பொருத்திய நகரமாக மாற்றப்படும்" என்றார்.

     சட்ட விரோத மதுபானம்

    சட்ட விரோத மதுபானம்

    கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளை மூட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்பு உள்ளதா என்கிற கேள்விக்குப் பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, "கொரொனா 2ஆம் அலையின் போது கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் கடைகள் ஏதும் மூடப்படவில்லை. அதனால் மதுபானங்கள் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டுப் பல குற்றச் சம்பவங்கள் நடக்கும் சூழல் உருவானது.

     டாஸ்மாக் மூடல்?

    டாஸ்மாக் மூடல்?

    தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது அல்லது நேரம் குறைக்கப்படுவது குறித்து மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜன.31 வரை அமலில் இருக்கும். இதை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் உடனான ஆலோசனைக்குப் பின்னர் வரும் நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Tamil Nadu minister Senthil Balaji says decision for closing TASMAC will be taken after review meeting. Amid raise in Corona, opponent parties says TASMAC need to be closed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X