ராமநாதபுரத்தில் மழை.. மற்ற இடங்களில் பனி.. குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. வானிலை மையம் தகவல்
சென்னை : வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்து வந்த மழை ஓய்ந்து விட்ட நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை, மழை
டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பனிமூட்டம் காணப்படும்
டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகக் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20 முதல் 22 வரை தமிழ்நாட்டில் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மீனவர்கள் எச்சரிக்கை
டிசம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதிவரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிசம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications