குழந்தைகளுக்கான மாநில கொள்கை.. வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், அவர்களுக்கான உரிமையை பெறுவதற்கும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் நிதியுதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

காணொலிக் காட்சி மூலம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் பல்துறை சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மரபணு தேடல் மென்பொருள்
இது மட்டுமின்றி, அறிவியல் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தடய மரபணு தேடல் மென்பொருளை (software) நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரங்களில் ஒதுங்கும் அடையாளம் காண முடியாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணலாம்.

குற்றவாளிகளை எளிதில் சிக்குவர்
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிதல், இயற்கைப் பேரிடர்களால் உயிரிழந்த நபர்களை கண்டறிதல் போன்ற பணிகளை மிக எளிதாகவும் துரிதமாகவும் இந்த மரபணுதேடல் மென்பொருளில் கண்டறியலாம்.

கருணை அடிப்படையில் வேலை
மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார். அதே சமயம், உள்துறை சார்பில் ரூ.44.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், நிலையங்கள், கட்டிடங்கள், உதவி சிறை அலுவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து காவலர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

குழந்தைகளுக்கான மாநிலக் கொள்கை
இதுமட்டுமின்றி, தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications