கோடை விடுமுறை ஓவர்.. நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் பள்ளிகள்..இதெல்லாம் கட்டாயம்!
தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: தமிழகத்தில் வரும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் தூய்மை படுத்தப்பட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் 1முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஜூன் 20ஆம் தேதியன்று பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதியன்று பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்
இதனிடையே பள்ளிகள் திறப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளியில் மின் இணைப்புகளில் மின்கசிவு கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகள் ஆய்வு
பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே மாணவ, மாணவிகளை அழைத்து வரப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமான உணவு
சத்துணவு கூடங்களில் சுத்தப்படுத்தி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கும் பள்ளி திறக்கும் நாள் என்று மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல்கள் பள்ளியில் பெறப்பட்டதை உறுதிசெய்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

இயல்பு நிலைக்கு திரும்பும்
மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட பள்ளி வளாகங்களும் விடுமுறையை அனுபவித்த மாணவர்களும் நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பள்ளி பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படும். இதுபோன்ற காரணங்களினால் சில நாட்களாக குறைந்து இருந்த போக்குவரத்து நெரிசல் மீண்டும் அதிகரித்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications