TET Results: தமிழகத்தில் ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு.. 1.08 லட்சம் பேர் தேர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு 'டெட்' தேர்வு கடந்த ஜூலை மாதம் 4, 5ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

tet tet exam teachers

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியயைாக பணியாற்ற வேண்டும் என்றால் 'டெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அதுமட்டுமின்றி இதுவரை 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

குறிப்பாக தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களின் வசதிக்காக 3 சிறப்பு 'டெட்' தேர்வுகள் நடத்தப்படும். அதில் பங்கேற்று ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் சிறப்பு 'டெட்' தேர்வு ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 2 லட்சத்த 20 ஆயிரத்து 464 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

அதன்படி பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய 1,60,929 பேரில் 61,153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதிய 59,535 பேரில் 47,628 பேர் பாஸாகி உள்ளனர். இதன்மூலம் 1.08 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் இறுதி விடைக்குறிப்புடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் 5 நாளில் தகுதி சான்றிதழை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+